Thursday, January 19, 2023

மௌன ராகம் by Vidhya Nivash

 


பூக்களின் நடுவே சத்தம்...

நீயும் இல்லை நானும் இல்லை

வண்ணத்துப்பூச்சி யாரை முத்தமிட போகிறதோ..

நன்றாக தென்றலில் ஆடி விளையாடு இன்னும் கொஞ்ச நேரத்தில் யார் யார் எங்கு இருப்பமோ தெரியாது..

யார் எங்கு போனாலும் எனக்கு வாய்ப்பே இல்லை..

மூலையிலிருந்து ஒரு கூக்குரல்

முந்தி கொண்டு என்னை எடுங்க 

அழகான விரல்கள் அள்ளி எடுத்து தொடுக்க

மாலையானது..

சில சட்டம் போட்ட படித்தின் மேல் ஆடாமல் அசையாமல் 

சில கூந்தலில் பலர் காண உலா வர கடைசியில் தலையணையில் நசுங்கி போக

சில சிலைகளின் மேல்..

பல பல பயணங்கள் ஒரு நாள் பிறகு மண்ணில்...

பல பரிணாமங்கள் எடுத்தாலும் வந்த இடமும் போகும் இடமும் எம் கையில் இல்லை..

நடு கூடத்திருந்து ஒரு விசும்பல் ஒரே இடத்தில் கைதி போல் சில சமயம் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும்  அதே சிறையில் அலங்கார பூக்கள் நாங்கள் ...


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...