Monday, January 30, 2023

உனக்காக காத்திருப்பேன் by Vidhya

 


 கோப்பையில் மிதக்கும் வறுத்த ரொட்டி துண்டுகள் சுடசுட தக்காளி சூப்..

ரயில் வண்டியில் ஏறி அவர்அவர் இருக்கையில் அமர்ந்து அடுத்த ஸ்டேஷனில் ஆரம்பிக்கும் அடி தொண்டியிலருந்து ஒலியேலுப்பி காப்பி காபி கா..

ஒவ்வொன்றாக வரும்..

சில நேரம் அமைதியாக போகும்.யாரவது ஒருவர் ஆரம்பித்தால் போதும்.நமக்கும் லைட்டாக பசிக்கும்..நாம் எதிர்பார்ப்பது மட்டும் வராது.

அதில் ஒன்று தான் இந்த தக்காளி சூப் சூடாக ஆவி பறக்க மிளகு தூள் தூவி ..ரயில் வண்டியின் சத்தத்தில் பலரின் பேச்சுக்களில் யாரோ வயலின் வாசிப்பது போல் மரம் செடிகள் முன்னும் பின்னும் வந்து மோதிச் செல்ல..தூக்கம் எங்கோ தள்ளிச் செல்ல..சற்றென்று மழை நின்றால் போல் வண்டி நிக்க கண் திறந்து பார்த்தால் எங்கும் இருள் ஆங்கங்கே மின்மினி போல் பல்பு மினுக்க மெதுவாக சக்கரம் சினுங்க மீண்டும் மழை தொடர பயணம் படையெடுக்க மனமோ தக்காளி சூப் நோக்கி..


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...