Sunday, January 15, 2023

பொங்கல் நினைவு by Veena Shankar



 பொங்கல் நினைவு


பொங்கல் என்றாலே என் நினைவுக்கு வருவது இரண்டு சம்பவங்கள். முதலாவதாக நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் தோழியர் அனைவரும் கல்லூரிக்கு விடுப்பு கொடுத்து திரைப்படத்திற்கு சென்றதும் இரண்டாவதாக இருபத்தைந்து வருடத்திற்கு முன்பு சென்னையில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் காணும் பொங்கல் அன்று பக்கத்தில் உள்ள கிராம மக்கள் எல்லோரும் நகரத்தில் உள்ள சென்னை மெரினா கடற்கரையை வலம் வருவர். அப்படி வரும் பொழுது தாங்கள் கொண்டு வரும் அனைத்து விதமான உணவுகளை உண்டு களித்த பின்னர் கடற்கரையில் கிடைக்கும் பல விதமான நொறுக்கு தீனிகளையும் தின்று சிறியோர் முதல் பெரியோர்கள் வயிரை நிரப்பி கொண்டு பேருந்தில் பயணம் செய்வர். இப்படியாக இரவு பொழுதில் திரும்பி வரும் பொழுது தாங்கள் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் வாந்தி எடுத்துக் கொண்டே வருவர். இதை பக்கத்தில் இருந்து பார்க்கும் பொழுது நமக்கும் அந்த உணர்வு ஏற்பட்டு விடும். இது பயணிகள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தது. இந்த இரண்டும் எவ்வளவு காலம் ஆனாலும் என் நினைவை விட்டு நீங்காது என்பது உண்மை.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...