Sunday, January 8, 2023

நில் வெல் by Vidhya Nivash

 


ஒற்றை காலில் நிற்குமாம் கொக்கு

மணிக்கணக்காக கால் நோகாமல்

நீ நிற்க பல பாடம் சொன்னாய்

ஆற்றோரமாய் காற்றில் வந்து மனதில் ஒட்ட

நில் நினைத்த காரியத்தில் 

உன் மனதையும் கவனத்தையும் அசைக்கும் கருவியை விளக்கி

நின்ற நிலையில் தளராமல் நில்

கூட்டத்தில் நிற்பதை விட

தனித்து நில்

பலம் பல மடங்காக உயர 

தன்னம்பிக்கை துணை நிற்க 

நில் வெல்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...