Wednesday, May 10, 2023

என் அழகு பேருந்தே by Veena Shankar

 


என் அழகு பேருந்தே!


நீ நின்றாலும் அழகு சென்றாலும் அழகு ஏன் ஓடினாலும் அழகே


நல்ல நாட்களில் நீ குளித்து முடித்தவுடன் உனை கொண்டவர் அலங்கரித்து பூமாலைகள் சூட்டி அந்த அழகில் நீ ஆர்ப்பரித்து வரும் எழிலும் என்னை திக்குமுக்காடச் செய்யுமே


கொள்ளும் வரை ஏற்றினாலும் உன் உயிரை கொல்லும் படி செய்வதும் நீ மறுப்பேதும் சொல்லாமல் இருப்பதும் அழகே


நேரம் தாழ்த்தி வந்தும் பலரின் எரிச்சலுக்கு ஆளானாலும் குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து செல்கிறாய்


மழைக்கு குடையானாலும் சில நேரம் உன்னில் அமர்ந்து குடை பிடித்ததும் உண்டு நான்


சினிமா பாடல்களை ஒலிக்க செய்து கேளாத பாடலையும் மனனம் செய்ய வைக்கிறாய்


நிறுத்தங்களில் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு சொப்பனம் ஆவதும் உன் சிறப்பே


பாமரன் மட்டுமல்லாது உன் மீது பற்று கொள்ளும் எவருக்கும் எளிதாகிறாய்


காற்றை கிழித்து செல்கையில் பயணியருக்கு ஆறுதல் தருகிறாய்


அசதி உள்ளோருக்கு மதியை அமைதி கொள்ள வைக்கிறாய்


உன்னை ஓட்டுபவரின் கடமைக்கும் கட்டுப்பாட்டுக்கும் தலை அசைக்கிறாய்


மக்களின் ஒழுங்கீன செயலுக்கும் அவர்களை மன்னிக்கிறாய் 


மக்கள் இருக்கவும் படுக்கவுமாக உன் வசதியை மாற்றி கொடுக்கிறாய்


பலவித வியாபாரம் அரங்கேறும் இடமாகவும் உன்னை மாற்றுகிறாய் 


இப்படியாக உன்னில் பயணம் செய்ய என்னில் பிறந்த ஆவல் சொல்லி மாளாதே

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...