Sunday, May 28, 2023

புத்தக கண்காட்சி by Vidhya Nivash

 

தண்ணீரில் மிதக்கும் கப்பல் அதில்

 பல கனவுகளுடன் ஏறும்

 மனங்கள்.புத்தகங்களை சுமந்து

 நின்றிருந்த பேழைக்குள் புகுந்து

 அலைமோதிய மக்கள் கூட்டம்.ஒரு

 அழகான அனுபவம்.கப்பலில் நடந்த

 புத்தக கண்காட்சி அழகு.

 எப்படியெல்லாம் படிக்கும் ஆர்வத்தை

 தூண்டும் நடவடிக்கைகள்.

 திண்படங்களை வாங்குவதை போல

 புத்தகங்களை வாங்கி குவித்த

 இளவட்டங்கள். ஆர்வக்கோளரில்

 புத்தகத்தில் மூழ்கி குடும்பத்தை

 மறந்தேன்,கைப்பேசியில் தொடர

 முடியவில்லை. தேடி வந்த மகள்

 நக்கலாக அழுவாதீங்க.இன்னொரு

 கண்காட்சியில் கட்டு கட்டாக

 புத்தகத்தை வாங்கி செல்வதை

 பார்த்து வியப்பு, ஆச்சரியம்,

 சந்தோஷம்.மொத்தமாக 31 புத்தக

 விருந்தாளிகள் புதியதாக வந்து

 சேர்ந்தன இல்லத்தில் சொத்தாக

 சின்ன வருத்தம் தாய்மொழியில்

 ஒன்றுக்கூட இல்லை. 


2 comments:

  1. புதியவர்களுக்கு . அடைக்கலம் தந்த வித்யாவிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...