படித்ததில் பல, நடந்ததில் சில
சிந்திக்க செய்தது.
காலையிலிருந்து படபடவென
பொரிந்து தள்ளிக்கொண்டே காலை
கீதம் ஆரம்பிக்கிறது ஒவ்வொரு
வீட்டிலும் சொன்னதை செய் என்று
அவர் நன்மைக்காக நாம் பாட்டு
பாடினாலும் நமக்கே அது பின்பு
பெரிய குறையாகி போகும்.
குறைகளை விடுத்து சின்ன
சின்ன நிறைகளிடம் நம் கவனத்தை
செலுத்த முயற்சித்தால் என்ன?
அம்மா இதை நீங்க
கவனிக்கவில்லையா? இதை மாற்றி
இருக்கிறேன்.முழுவதும் நான்
தவறில்லை என சொல்லும் போது
எங்கோ குத்துக்கிறது. காலையில்
எவ்வளவு ஆர்ப்பாட்டமாக போனாலும்
மாலையில் செல்லமாக வந்து
கட்டித்தழுவும், எதையும் தூசன
தட்டிச்செல்லும் இந்த
தலைமுறையிடம் கற்க வேண்டியவை
பல.(Instant I love you, thank you and
sorry..கோபத்தில் திருப்பிப்போடு😄
உடனடி சரவெடி)
தினமும் செய்ததே செய்து செய்து
இறந்த காலத்தையும்,
எதிர்காலத்தையும் முடிச்சுப்போட்டுக்
கொண்டு நிகழ்காலத்தை மறைந்து
அனுபவிக்க மறக்கிறோமோ ...
தினமும் புதுசு புதுசாக தேடி திரியும்
இந்த பட்டாம்ப்புச்சிகள்
நிகழ்காலத்தை ரசிக்க நாமும்
துணையாக ரசிப்போமா..

மிக மிக அருமை வித்யா. அசத்தலான வாக்கியம். இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து நிகழ்காலத்தை தொலைக்கும் நாம், நிகழ்காலத்தை அனுபவிக்கும் பிள்ளைகளோடு நமக்கு ஏன் இந்த இனம் புரியா பொறாமை என்று தெரியவில்லை. அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா🙏
ReplyDelete