Monday, May 15, 2023

கட்டில் மெத்தை by Veena Shankar

 


கட்டில் - மெத்தை


இருவர் மட்டுமே தூங்கும் நேரத்தில் இங்கே பல ஜனனங்கள்


 படுக்கையில் விழும் தருணத்தில் இங்கே நிகழும் மரணங்கள்


தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள இணையும் புது வரவுகளும் உறவுகளும் ஆடுகளமாய் மாற்றும் காலங்கள்


இங்கே பிறப்பின் வரவால் எழும் மகிழ்ச்சி குரலும் உயிர் பிரியும் வேளையில் வரும் மரண ஒலியும் கேட்கும் நேரங்கள்


வளர்ந்த மழலைகளின் விளையாட்டு மைதானமாய் போற்றும் நிமிடங்கள் 


இங்கே அமைதியாய் துயில் கொள்ள நாடும் பல காரணங்கள்


புரண்டு படுத்தாலும் கருமிக்கு தூக்கம் வாரா தருணங்கள்


பல சொத்துக்களை காக்க வேண்டி வாராத தூக்கத்தை வரவழைக்க இங்கே நினைக்கும் மனங்கள் 


வயதின் காரணமாய் தூக்கத்தை இங்கே தொலைக்கும் நினைவுகள்


துக்கத்தை மறக்க இங்கே தஞ்சம் புகும் சிரங்கள்


ஆடம்பரத்திற்காக வாங்கி தூங்க தவிக்கும் நெஞ்சங்கள்


அசதிக்கு மருந்தாக சற்றே இளைப்பாற வேண்டும் உடல்கள்


வரதட்சணையாக பெற்று களித்தாலும் அதில் உறங்கி கழிப்பதே ஆனந்தம்


மரமானாலும் கயிறானாலும் இரும்பானாலும் உன் அழகில் மயங்கி, தொலைத்த நாட்களும் உண்டு இங்கே.


எத்தனை கோணங்கள் உன்னில் வைத்துள்ளாய். 


ஒருவர் விட்டு ஒருவர் நீங்கள் பிரிந்தாலும் தரும் மகிழ்ச்சியில் இணையானவர்கள் என்றும் எங்களுக்கு இணக்கமானவர்கள்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...