சாப்பிட்டவுடன் மயக்கம்
படுக்கையை கண்டவுடன் ஒரு தூக்கம்
படுத்த மறுநொடியே உன் மடியைக்
கொடுத்து உறங்க செய்தாய்
கனவிலும் மெல்ல புரண்டேன்
காயங்கள் இல்லா இதத்தை
கொடுத்தாய் எங்கு சென்று வந்தாலும்
அவர்அவர் படுக்கையே சொர்க்கம்
கண்ணீரையும் சிந்தினேன்
பலவற்றையும் சிந்தினேன்
சத்தமில்லா அமைதி கொண்டாய்
பலமுறை இறுக்கத்தையும் பைத்தியக்
காரதனத்தையும் ரசித்தவள் நீ
என் சோர்வு நீங்க நீ பெரும் தவம்
கொண்டாய்..
கட்டிலும் மெத்தையும் தூக்கமும்
கனவும் ..
இப்படிக்கு,
உன்னிடம் என்னை தொலைத்தேன் .

அழகு நடை வித்யா
ReplyDeleteThank you Veena
ReplyDelete