Monday, May 1, 2023

திருநங்கைகள் by Veena Shankar

 


திருநங்கைகள்


அரிதாரம் பூசிக் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக வலம் வரும் உங்களிடத்தில் பெண்மையில் ஆண்மையும், ஆண்மையில் பெண்மையும் புகுவது தானோ அதிசயம்.


சிரம் தாழாமல் கரம் நீட்டி யாசித்தாலும் உங்கள் புற அழகில் மயங்குவோரும் உண்டு.


எத்தனை ஆயிரங்கள் செலவழித்து தைத்தாலும் உங்கள் ஆடையின் நேர்த்தி பற்றிய ஐயம் மனதில் எழாமல் இல்லை


மத்தளம் இல்லாது சப்தமிடும் கரங்களும் தொண்டையின் பிளவுகளால் எழும் பேச்சும் எங்கோ இருந்தாலும் அண்மையில் இருந்தவாறு ஒலிக்க செய்யும்


உங்களிடம் காதல் கொண்டு பரிசு கொடுப்பதும் வாங்குவதும் அரிதே


அடுத்த பாலினத்தவர் புறக்கணித்தாலும் அதனை புறம் தள்ளி வைக்கும் மனத்தவர்


வறுமையின் பிடியிலிருந்து தங்களை தளர்த்தி கொள்ள தெரிந்தவர்


யாசிப்பு மட்டுமே தொழிலாக இருந்ததை மாற்றி நாட்டின் குடிமையிலும் பங்கு பெற அறிந்தவர்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...