Saturday, May 6, 2023

புது அனுபவம் தந்த ருவைஸ் by Vidhya Nivash



 பரந்த மணல்வெளி கண்ணைக்கட்டும் வெயில் காணல் நீர் ஆங்காங்கே சிறு புதர்கள் பாலைவனத்தின் நிஜபடம் .வறண்ட நிலப்பரப்பு பயணத்தை நீட்டிச்செல்ல சின்னசின்ன உப்பு நீர் தேக்கங்களும்,செடிகளும் வரவேற்க.மணல்மெத்தை  நடுவே ஒரே மாதிரி அடுக்கிய கட்டிடங்கள். அமீரகத்திலிருந்து கொஞ்சமில்லை கொஞ்சம் அதிக தொலைவில் குட்டித்தீவு.கல்நெய்,பாறை எண்ணெய் சுத்தகரிக்கும் ஆலை அதை கொண்டு உருவான தொழில் நகரம்.

வாழை மரத்தோரணம் வரவேற்க. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு அதிலும் பண்பாட்டை போற்று என்பதற்கு ஏற்றாற்போல குட்டி தமிழகம் அற்புதமாக கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு.எங்களுக்கு சித்திரை முழுவதும் புத்தாண்டு.கண்களுக்கும் காதுகளுக்கும்,மனதிற்கும் விருந்து.

எத்தனை அழகான கலைநிகழ்ச்சிகள் புரவியெடுப்பு,மயில்,காவடி,கரகம்,முளைப்பாரி , கும்மி என்று நீளும் தமிழர் கிராமிய கலைகளின் பட்டியல்.மாபெரும் வாய்ப்பு தமிழகத்திலே இருந்தாலும் நகரத்தையோட்டி வளர்ந்தவருக்கு நேரில் பார்க்க முடியாதவை கண்ட மகிழ்ச்சி.

பாலைவனத்தில் ஒரு சொர்க்கமாக தெரிந்தது ருவைஸ்.பலரின் கடும் உழைப்பால் அற்புதமாக இருந்த கொண்டாட்டங்கள் ஒரு புது அனுபவம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...