ஒவ்வொரு பருக்கையாய் நீ முதுகில் சுமக்கும் உன் பொறுப்பு ...!....
ஒவ்வொரு துளியையும் நீ வீணாக்காமல் மதிக்கும் உன் பக்குவம்...!..
தனக்கு பத்துமா என்று யோசிக்காது தன் கூட்டத்தையே அழைக்கும் உன் தலைமை கடமை...!..
எத்தனை இடையூறு வந்தாலும் நேர் வழி செல்லும் உன் கண்ணியம்...!..
மலைக்கிறேன் நான் ..
மனிதன் மறந்த அத்தனையும் உன்னிடம் மட்டும் இன்னும் பொக்கிஷமாய் எப்படி என்று ?.. .!!!..
சில கரும்பு கூட ஏமாற்றி விடலாம் சில சமயம் இனிப்பு குறைந்து...ஆனால் -
நீ மட்டும் என்றும் எம் உள்ளம் கொள்ளை கொள்கிறாய் நூறு சதவீதம் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து காட்டி..
என்றும் இனிக்கும் எறும்பே ..!..
எம் மனம் திருடும்
கரும்பே ....!!!.. kiruthi

அருமையான வரிகள் கிருத்திகா...வாழ்த்துகள்
ReplyDeleteஅழகோ அழகு கிருத்திகா
ReplyDelete