Wednesday, May 17, 2023

பார்வையின் தேடல் by Veena Shankar

 


பார்வையின் தேடல்


ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சோகம் இருக்கும். அதற்காக முடங்கி விட முடியாது. கடந்து தான் போக வேண்டும். வெளியில் பார்க்கும் போது சிறப்பாக தோன்றினாலும் உண்மையில் சோகம் இருக்கலாம். சிலர் மற்றவரிடம் தங்களை உயர்வாக காட்சிப்படுத்தி கொள்ள வேண்டுமென்பதற்காக மிகைப்படுத்திக் காட்டலாம். 


பலரும் ஆசையில் அனுபவிக்கும் பலவும் மகிழ்ச்சியால் மட்டுமே என்பதும் தவறான கருத்தே. வெளித்தோற்றம் தேவை தான். அதற்காக அளவுக்கு மீறிய மகிழ்ச்சி கொள்ளும் புறத்தோற்றம் ஆபத்தானது. உண்மையானது கிடையாது. 


தங்களின் துக்கத்தை மறக்க அவர்கள் செய்யும் செயல் அடுத்தவருக்கு உண்மை தெரியாமல் இருக்கும் வரை அதை காப்பாற்றிக் கொள்ளவே முயல்வர். உண்மையில் நூறு சதவீதம் மகிழ்ச்சி என்பது அறிவீனம். ஆனால் அதை கடந்து செல்ல ஏந்தும் ஆயுதம் தான் நீங்கள் வெளியில் காணும் அவர்களின் பொய்யான தோற்றமும் மகிழ்ச்சியும் அனுபவிக்கும் வாழ்க்கையும். 


கிடைக்காத ஒன்றிற்கு ஆசைப்பட்டு அலைவதை விட கிடைத்ததை வைத்துக் கொள்ளவும் அதை கையாளும் முறையையும் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.  


பார்வை எப்போதும் முரண்பாடுடையது. நமக்கு சரியென படுவது பிறர் பார்வைக்கு தவறாக தெரியலாம். இதற்கு அவரவர் சூழ்நிலையும் காரணம் தான். 


உதாரணமாக திரைப்பட நடிகைகள் சொல்வது போல கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் ஒரு மெல்லிய இடைவெளி உண்டு என்பதை கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இன்று வரை தெரியாத விசயம் அந்த இடைவெளியின் அளவுகோல் தான்.


எனவே உங்கள் பார்வை சிறக்க உங்கள் மனதை தெளிவாக்க முயலுங்கள்.


 கண்ணும் பார்வையும் ஒன்றானால் காட்சியும் ஒன்றே


விழியும் வழியும் நேரானால் வாழ்வில் வசந்தம்



கண்ணே! என் கண்ணே! 


எந்த ஓவியனும் தன் தூரிகையில் அழகாக வரையக்கூடிய கண்ணே! என் கண்ணே!


உன்னை போற்றாத கவிஞரும் இல்லை மனிதரும் இல்லை


மீனுக்கும் மானுக்கும் ஒப்புமையாய் இருக்கும் கண்ணே! என் கண்ணே!


மழலை முதல் மனிதப் பருவம் வரை உருவத்தில் மாற மறுக்கிறாயே 


நீயும் என்னுள்ளே இருந்தாலும் நான் உன்னை காண்பதில் சிக்கலே கண்ணே! என் கண்ணே!


அடுத்தவரை காணும் போது உன் விழியும் என் விழியும் மையல் கொள்ளும்


உன்னை அலங்காரம் செய்யச் செய்ய என் முக அழகும் கூடுமே கண்ணே! என் கண்ணே!


உன்னில் வழிந்தோடும் கண்ணீருக்கு பின்னே எத்தனை இன்னல்கள் வரலாறுகள்


கலங்கினாலும் நீ உதிர்க்கும் சிரிப்பு அழகு கண்ணே! என் கண்ணே


எதிர்காலம் அறியா எனக்கும் நீ தருவது பார்வை எனும் விடையே !


பொக்கிஷமாய் எனக்கு கிடைத்த கண்ணே! என் கண்ணே !



பார்வை



மழலையின் பார்வை தாய்க்கானது


விதவையின் பார்வை எதிர்காலத்திற்கானது


விடலையின் பார்வை காதலுக்கானது 


கன்னிப் பெண்ணின் பார்வை வாழ்க்கைக்கானது


பக்தனின் பார்வை பரம்பொருளுக்கானது


பாதிப்படைந்தவரின் பார்வை விடியலுக்கானது


கணவனின் பார்வை அன்புக்கானது


மனைவியின் பார்வை குறிப்பானது


மாணவனின் பார்வை மதிப்பெண்ணிற்கானது 


கயவரின் பார்வை தேவைக்கானது


கருமியின் பார்வை சுரண்டலுக்கானது


கற்றவரின் பார்வை செழுமைக்கானது


வறியவனின் பார்வை ஏக்கதிற்கானது


கொண்டவனின் பார்வை எதிர்ப்பார்ப்பானது


காணும் பார்வை யாவும் ஒன்றல்ல. ஆனால் இருக்கும் காட்சிகளின் அவசியம் எப்போதும் ஒன்றானது மனிதனின் தேவையும் பார்வையும் மாறும் வரை

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...