Monday, May 15, 2023

நெருப்பு பந்து by Veena Shankar

 


பூமி என்னை தாங்குவது போல் ஓர் நாள் கதிரவனையும் நான் ஏந்துவேன்


கால்பந்து விளையாடும் கால்களுக்கு நெருப்பு பந்தும் ஓர் பந்தே


கருமை நிறம் உன் வாழ்வின் கடந்த காலமாகவும்


செந்நிறம் உன் வாழ்வின் துக்கத்தை நினைவுபடுத்துவதாகவும்


மஞ்சள் நிறம் உன் வாழ்வின் வெறுமை நீக்கி பசுமையாக மாற்றும் விதமாகவும் அமையுமே!


நினைவோ ஒரு பறவை, 


சிறகில்லாமல் பறக்கவும் கூடுமோ?


பூமியில்லாமல் நடக்கவும் கூடுமோ?


தெளிவில்லாத மனத்தால் சிந்திக்கவும் கூடுமோ?


சுகம் தாரா வாழ்வில் மிளிறவும் கூடுமோ?


வறுமையின் பிடியில் குளிர் காய கூடுமோ?


தருமத்தின் வாழ்வில் பொய்மையும் கூடுமோ?


உண்மை அறியா வார்த்தையும் வளம் காண கூடுமோ?


எண்ணங்கள் பல வண்ணங்கள் சில

சின்னங்கள் பல

இன்னல்கள் சில


 பிம்பமாய் இருந்தாலும் ஒருவன் வாழ்வின் எதிர்காலத்தை நினைப்பது நிஜமே


 தேடி போ


வாய்ப்பை தேடி போ ஏற்றம் கொள்வாய்


வசதியை தேடி போ வார்த்தையை சமப்பாய்


குடிசையை தேடி போ

 வறுமையை உணர்வாய்


மாற்றத்தை தேடி போ வளமை அடைவாய் 


தனிமையை தேடி போ முதிர்ச்சி காண்பாய்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...