Monday, May 8, 2023

படகும் கருத்தும் by Veena Shankar

 


துடுப்பும் தூண்டிலும் மீனவனுக்கு கண்கள்


மீனவன் இவன் நித்திரை கொண்டால் கடலும் கொள்ளாது , மாறாக நித்திரைக்கு விடுப்பு கொடுத்தால் அவன் வீட்டில் அடுப்பும் எரியும்


கண்ணீரால் கரித்த இவன் வாழ்க்கைக்கு கரிக்கும் கடல் நீரும் விடையே


 மீன் பிடிக்க அன்னமும் தேவையோ? கலன் ஏதுவாகிலும் களம் காண பலன் உண்டு நிச்சயம்


ஆறாத சோகத்தில் நான் எடுத்த துடுப்பு, என் வீட்டு அடுப்பு எறிய உதவுகிறது. 


குடிநீருக்கு பயன்படாத கடல் நீரும் , என் கடன் தீர்க்க உதவுகிறது


நான் கேட்டதும் எனக்கு வாழ்வு கொடுத்தாள் கடல் அன்னை தன்னுள்ளே கொண்ட உயிர்களின் வாழ்வை பறித்து


சிரம் தாழ்த்தி கரம் உயர்த்தி செய்யும் காரியம் யாவும் பெறும் வெற்றிச் சரம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...