Friday, May 12, 2023

உறவுகள் by Veena Shankar



 உறவுகள்


எட்டி போனால் தட்டி போகும்


தட்டி கழித்தால் பக்கம் வரும்


குற்றம் சொன்னால் பிரிவு கொள்ளும்


பிரிவு என்றாலும் குற்றம் காணும்


பரிகாசம் செய்தால் பாசம் குறையும்


பாசம் வைத்தால் வேசமென்று சொல்லும்


கருத்து சொன்னால்

விலகி நிற்கும்


விலகி நின்றால் கருத்து கேட்கும்


பக்கம் போஎனால் தவிப்பு நீங்கும்


தவிப்பு நீக்கினாலும் பகமை கொள்ள காரணம் தேடும்


சில நேரம் தோழமையும் உறவாகும்


உறவு என்றானபின் தோழமையும் மறக்கும்


நட்பு கொண்டால் சுகம் தேடும்


சுகம் அடைந்த பின் ஆளுமை கொள்ளும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...