Sunday, May 14, 2023

அன்னையர் தின வாழ்த்து by Veena Shankar

 


அன்னையர் தின வாழ்த்து 


தங்கநகை பூட்டினாலும் அழகு

வெறும் மஞ்சள் கயிறு அணிந்தாலும் அழகு


பல் வரிசை தெரிய சிரித்தாலும் அழகு

புன்சிரிப்பு காட்டினாலும் அழகு


சுடராக ஒளிர்ந்தாலும் அழகு

பிறரை பாசத்தால் உருக வைப்பதிலும் அழகு


கருத்துடன் பேசினாலும் அழகு

காளியாய் மாறினாலும் அழகு


தடபுடலான விருந்தும் அழகு

நாள்தோறும் செய்யும் சிக்கன சமையலும் அழகு


நிதி அமைச்சராய் உருவெடுப்பதும் அழகு

நீதி சொல்லி பிள்ளைகளை வளர்ப்பதும் அழகு


குழந்தைகளுக்கு முன்னுதாரணமாய் திகழ்வதும் அழகு கணவனுக்கு இரண்டாம் தாயாய் மாறுவதும் அழகு


தோட்டத்து பூக்கள் போல தினம் மலர்வது அழகு

பிறருக்காக மாற்றி கொண்ட வாழ்க்கையும் அழகு


பாசத்தை ஊட்டுவதும் அழகு

பாரபட்சம் காட்டாத மனதும் அழகு


சரித்திரம் படைப்பதில் அழகு

சாத்திரம் புரிய வைப்பதில் அழகு


சார்ந்து வாழும் பண்பு அழகு

முகம் கோணா வார்த்தை அழகு


போதவில்லை நேரம் உன்னை போற்ற

உன் மடி சாய்ந்து உன்னை கிரகித்து கொள்ள ஆசை, ஒவ்வொரு குணமாய் கற்றறி்ய ஆசை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...