Thursday, May 4, 2023

சில வரிகள் by Vidhya Nivash



 படித்ததில் பிடித்த வரிகள் நீ இந்த

 உலகில் பிறப்பதற்கு முன்பே உன்

 தாயின் தனங்களில் உணவு

 படைக்கப்பட்ட போது எதற்காக

 நாளைப்பற்றி கவலைகள் எவ்வளவு

 அர்த்தமுள்ள வரிகள் இதை படித்த

 உடனே யாரோ மண்டையில் ஓங்கி

 அடித்த மாதிரி இருந்தது .நமக்கானது

 நமக்கு முன்னே படைக்கப்பட்ட போது

 எதற்காக தினம் தினம் பல

 சுமைகளை துமக்கிறோம். பல

 நெடுங்காலமாக நடந்ததையே

 மனத்திரையில் போட்டு போட்டு

 பார்க்கிறோம். காய்த்த காய் ஒரு நாள்

 பழுக்கத் தான் போகிறது அதற்கு முன்

 அவரசம் ஏன்? எடுக்கும் முயற்சிக்கு

 கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்ற

 நம்பிக்கையே வழி நடத்துமில்ல..

காதை திறந்து படி புத்தகத்தை 

கண் மூடி கேள் மனதிடம் 

வாயை திறக்காதே தேவையில்லாமல்

மனதை திறந்து வை கொடுக்கும்

 போது எடுக்கும் போது  கையை

 சுருக்கிக்கொள்.


6 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...