Wednesday, May 31, 2023

இந்த வாரத்தலைப்பு "கூந்தல்" by Vidhya Nivash

 


துள்ளிக்குதிக்கும் அலையை பார்க்க

 மறந்தேன் காற்றில் அலைமோதி

 மங்கையின் மலர்போன்ற முகத்தை

 தழுவி காற்றில் விளையாடும்

 கூந்தலை கண்டு அசையாமல்

 நின்றேன், மயங்கி விழுந்தேன்.

வானுக்கும் கடலுக்கும் நடுவில்

 உலகை மறந்து சுதந்திர காற்றை

 உடுத்தி என்னை மறந்து தண்ணீரில்

 கரையும் நேரம் ..

அம்மா திருத்திய கூந்தல் அழகு

 ஒவ்வொருவரின் முகவரி சொல்லும்

 கூந்தல் உன் அருமை தெரியாமல்

 பலரும் மொட்டை அடித்து அமைதி

 தேடுகின்றனர் இரு நிமிடம் உன்னை

 கோதினால் போதும்..

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...