Friday, May 5, 2023

மரியாதை விடுதலை by Vidhya Nivash

 


காலையில் சிந்திக்க தூண்டிய வார்த்தை

 மரியாதை. கண்டதும் எழுந்து நிற்கும்

 கட்டாய மரியாதை ,வயதின் காரணமாக

 நம்மை அறியாமல் கொடுக்கும் மனமார்ந்த

 மரியாதை ,செயலில் மூலமாக மனதில்

 தூக்கி வைக்கும் மரியாதை, சிலரை

 பார்க்காமலே தோன்றும் அதிதீவிர

 மரியாதை ,இப்படி அடுக்கிக்கொண்டே

 போகலாம்.உண்மையில் மரியாதை

 என்றால் என்ன? எதில் மரியாதை தேவை?

 உறவில் மரியாதை தேவையா? என பல

 கேள்விகள்.கேட்டுப்பெறும் மரியாதைக்கு

 மதிப்பில்லை.சில நேரத்தில் மனதில்

 இருப்பது நமக்கு தெரிந்தால் போதுமில்ல.

 மரியாதையுடன் எப்படி அன்றாடம் பழக

 முடியும்.மரியாதைக்கு பதிலாக

 முக்கியத்துவம்,அக்கறை என எதை

 பொறுத்தலாம் உறவில்?


"கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

 கண்டதையெல்லாம் நம்பாதே

காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா

தாடிகளெல்லாம் தாகூரா

 மீசைகளெல்லாம் பாரதியா

வேஷத்தில் ஏமாறாதே தோழா"


என்ற இருவர் படத்தின் பாடல் வரிகளை

 விடுதலை விடுதலை என மனம்

 முணுமுணுக்க நடைபயிற்சியில் காலை

 வேலை முடிந்த சந்தோசமா

 தெரியவில்லை. எத்தனை அழகானவரிகள்

 சின்ன சிறு விடுதலைக்கூட உற்சாகம்

 தரும் .நாமே நமக்கு தரும் விடுதலை

 அளப்பரியது.


விடுதலையும் கொடுத்து மரியாதை 

 கேட்கின்ற சமூகமில்ல.

 

2 comments:

  1. தங்கள் எழுத்து மூலம் பிறந்தது மரியாதை உங்களிடம் முழு மன சுதந்திரமாய் என்னிடம். அருமை வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...