Tuesday, May 9, 2023

மந்தியின் மந்திரம் by Veena Shankar

 


மந்தியின் மந்திரம் தன் தேவைக்கு அஸ்திரம் , தெரிந்து கொண்டது துணையின் தந்திரம்


அப்பா! அப்பா! மன்னிச்சிடுங்க, மதிப்பெண் குறைவா இருந்தாலும் என்னை நல்ல கல்லூரியில சேர்த்துவிடுங்கள்.


தன் கணவன் விட்டு பிரிந்த சோகத்தை இவரிடம் பகிர்லாமா என்று விழிக்கிறது, இப்போது வருகிறேன் என்று சொல்லி தன்னை ஏமாற்றி சென்ற கணவனை எண்ணி. ஏமாற்றம் தொடருமானால் ஏமாற்றத்திற்கும் ஏமாற்றமே


இந்த மனிதர்கள் நம்மை வாழ விடவேமாட்டர்கள். காடும் வேண்டாம் நாடும் வேண்டாம். நம் மனக்கோயிலிலே நாம் ஒன்றாக வாழ்வோம்


கவிதை புனைய நேரமில்லை

சிந்திக்க மனதில்லை

சுகம் காண வழியில்லை

கருத்தை பகிர ஆளில்லை

வறுமை நீங்க வசதியில்லை

அசதி போக்க தேவையில்லை

வா வா சீக்கிரம் இந்த இடத்தை சுத்தம் செய்து மண அழுக்கையும் விரட்டுவோம்


 வார்த்தைகள் பரிமாற வழி பிறந்ததோ இல்லையோ பிரிய வழி கிடைத்தது, பழகிய பின் தெரிந்து கொண்ட உண்மையால்


இப்படிக்கு குரங்கு, மரம் விட்டு மரம் தாவும் நானும் என் மனதும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...