Wow
.. கூந்தல் !..
உன் மேல் கொண்ட காதலினால்..
உன்னை நினைத்து நினைத்து நான் உருக ..
நீ அதற்கும் சேர்த்தல்லவா கொட்டி தொலைக்கிராய் ....
இப்போது ..
சொல்லி விடு ..
உன்னை நினைக்கவா ?..
இல்லை
மறுக்கவா ?..
Wow
.. கூந்தல் !..
உன் மேல் கொண்ட காதலினால்..
உன்னை நினைத்து நினைத்து நான் உருக ..
நீ அதற்கும் சேர்த்தல்லவா கொட்டி தொலைக்கிராய் ....
இப்போது ..
சொல்லி விடு ..
உன்னை நினைக்கவா ?..
இல்லை
மறுக்கவா ?..
துள்ளிக்குதிக்கும் அலையை பார்க்க
மறந்தேன் காற்றில் அலைமோதி
மங்கையின் மலர்போன்ற முகத்தை
தழுவி காற்றில் விளையாடும்
கூந்தலை கண்டு அசையாமல்
நின்றேன், மயங்கி விழுந்தேன்.
வானுக்கும் கடலுக்கும் நடுவில்
உலகை மறந்து சுதந்திர காற்றை
உடுத்தி என்னை மறந்து தண்ணீரில்
கரையும் நேரம் ..
அம்மா திருத்திய கூந்தல் அழகு
ஒவ்வொருவரின் முகவரி சொல்லும்
கூந்தல் உன் அருமை தெரியாமல்
பலரும் மொட்டை அடித்து அமைதி
தேடுகின்றனர் இரு நிமிடம் உன்னை
கோதினால் போதும்..
கூந்தல் ரகசியம்
அரவிந்தனும் அவன் பெற்றோரும் அவனுக்கு பெண் பார்க்க சென்றிருந்தனர். பெண் வீட்டில் கொடுத்த பஜ்ஜி, சொஜ்ஜிகளை எல்லாம் முழுங்கி விட்டு பெண்ணை காண்பிப்பார்களா இல்லையா என்ற சந்தேகத்தில் அமர்ந்திருந்த போது தரகர் பெண்ணை அழைத்து வரும்படி சொல்ல, பெண்ணும் வந்து நின்றாள். அவளிடம் தனியே பேசுவதற்காக காத்திருந்தான் அரவிந்த். அவன் பார்த்த பெண் சுமி, பேரழகியாக இருந்தாள் . ஒற்றை நெற்றி பொட்டு பேசியது அவள் மொத்த அழகையும். பிறை சந்திரனை போன்ற நெற்றி, சுண்டி விட்டால் ரத்தம் தெறித்து விடும் அளவிற்கு சிவந்த முகம், உயரத்துக்கு ஏற்ற எடை நடை, உடை உடுத்திய நேர்த்தி, பின்னழகை தொடும் அளவிற்கு திரண்ட கூந்தல் என்று எல்லா அம்சங்களும் அரவிந்துக்கு சுமியை மிகவும் பிடித்து போய்விட்டது. அவளிடம் கேட்ட கேள்விக்கு மற்றவர்கள் பதில் சொன்னதால் அரவிந்துக்கு ஓர் சந்தேகம் இருந்தது அவள் ஊமையாக இருப்பாளோ என்று நினைத்தான். அதனால் தான் அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றான். அதற்கு சம்மதித்த இரு வீட்டு பெற்றோரும் தனி அறையில் பேசுமாறு சொன்னர்.
அவள் பேச, அவள் ஊமையல்ல என்பதை அரவிந்த் தெரிந்து கொண்டான். அவர்களின் பேச்சு பரிமாற்றத்தின் ஊடே சுமி, தான் ஒரு உண்மையை சொல்லப் போவதாக அரவிந்திடம் சொல்ல, என்ன உண்மையாக இருக்குமோ என்று மனதில் குழப்பத்துடன் அரவிந்த் இருந்தான். காதல் தோல்வியா? அல்லது காதலனை கை பிடிக்க வேண்டும் என்று சொல்லப் போகிறாளா? என மனம் பதைபதைத்தது அரவிந்துக்கு. இருந்தாலும் தன்னை திடப்படுத்திக் கொண்டவன் சுமியை பார்த்து என்ன என்று கேட்பது போல் பார்க்க அவளும் தொடர்ந்தாள்.
தான் அழகு என்று பல பேர் சொன்னாலும் அந்த அழகோடு சேர்ந்தது தான் தன் கூந்தலும். ஆனால் தன்னுடைய கூந்தல் நிஜம் அல்ல என்றும் டைபாய்டு காய்ச்சல் வந்த போது கூந்தல் உதிர்ந்து விட்டது என்றும் எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டும் தன்னுடைய கூந்தலை வளர்க்கவே முடியவில்லை. அதனால் ஆங்காங்கே சொட்டை தோய்ந்த தலையுடன் திரிந்து மற்றவர்களுக்கு அருவெறுப்பாக தெரிந்திருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருந்த போது இதற்கான தீர்வாக ஹேர் பிளான்டேஷன் செய்யுமிடத்திற்கு சென்று பல ஆயிரங்கள் செலவழித்தும் ஏமாற்றம் தந்ததாகவும் இருந்த சொற்ப முடியையும் அங்கே இழந்ததால் வேறு வழியில்லாமல் செயற்கை கூந்தலை அணிந்து கொள்வதாகவும் அவள் கூந்தல் அழகில் மயங்கி அவளை பிடித்து இருக்கிறது என்று அரவிந்த் நினைத்தால் அவனுக்கு அது ஏமாற்றத்தை அளிக்குமே என்று நினைத்தே தான் அவனிடம் உண்மையை சொன்னதாகவும் இதுதான் என் கூந்தல் என்று அதை கழட்ட , சுமி வேண்டாம் . அது அப்படியே இருக்கட்டும் என்று மறுத்தான் அரவிந்த் அவளுடைய அழகை ரசித்தவாறு.
பெண் பார்க்கும் படலம் முடிந்து இரு வீட்டாரும் எதிரணியின் பதிலுக்காக காத்திருந்தனர்.
சுமி, தான் உண்மையை மாப்பிள்ளையிடம் சொன்னதாக அவள் பெற்றோரிடம் தெரிவிக்க மேலும் கீழும் குதித்தனர். "எத்தனை தடவை சொல்றது உன்கிட்ட? இதை சொல்ல வேண்டாம் என்று. இப்படி உண்மையை சொல்லி சொல்லியே உனக்கு திருமண சம்பந்தங்கள் கைவிட்டு போனது உனக்கு தெரியும் தானே? பிறகு ஏன் மறுபடியும் அப்படி செய்தாய்? " என்று அவளை வார்த்தையால் வறுத்து எடுத்தனர் பெற்றோர் .
"இந்த பிரச்சனைக்காக தானே நாம் திருச்சியை விட்டு சென்னைக்கு மாற்றல் ஆகி வந்தோம். அங்கு இருப்பவர்களுக்கு எல்லாம் உனக்கு கூந்தல் இல்லை என்று முன்பே தெரிந்து விட்டதால் உன்னை பெண் பார்க்க யாரும் வரவே இல்லை . இன்றாவது உண்மையை மறைத்து பேசியிருக்கலாமே?" என்று சொல்ல, அதை அவள் காதில் வாங்கிகொண்டதாக தெரியவில்லை.
அரவிந்திற்கு எல்லா உண்மையும் தெரிந்தால் அதனை மீறி அவன் தன்னை விரும்பினால் மட்டுமே திருமணம் செய்வதாக சொன்னாள் சுமி. அந்நேரம் அலைபேசியின் மணி ஒலிக்க, அரவிந்தின் வீட்டாரிடம் இருந்து சுமியை திருமணம் செய்ய அரவிந்த் ஒப்புக்கொண்டதாக சொல்லவும் வானத்தில் பறப்பது போல சுமியும் உணர்ந்தாள்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டு இனிதே நடந்தேறியது.
ஏனோ ஒரு குற்ற உணர்ச்சி குடி கொண்டது அரவிந்தனின் மனதில். திருமண தினத்தன்று அவன் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். அதற்காக அவனுடைய பெற்றோர் எவ்வளவு முறை அவனை தேற்றி இருப்பார்கள் என்று தெரியாது.
முதல் இரவு அறையில் தம்பதியர் தனித்திருக்க, அந்த உண்மையை போட்டு உடைத்தான் அரவிந்த். தன்னுடைய விக்கினை கையில் எடுத்தபடியே சுமியை பார்க்க, ஒரு கணம் சுமியும் அதிர்ந்தாள். அவளுக்கு இருந்த தைரியம் தனக்கில்லை என்றும் தனக்கும் அவளை போலவே மோசாமான நிகழ்வு நடந்ததாகவும் தானும் தன் முடியை அதில் இழந்ததாகவும் தன் பெற்றோர் உண்மையை சொன்னால் உயிரை மாய்த்து கொள்வதாக சொன்னதால் உண்மையை மறுத்ததாகவும் அவளுக்கும் இதே நிலை என்பதை தன் பெற்றோரிடம் அவன் இன்று வரை கூறவில்லை என்று சொல்லி அவள் கையை பிடித்து மன்னிப்பு கேட்டான்.
தம்பதியர் இருவருக்கும் ஒரே நிலை என்பதால் அவர்களிடையே சச்சரவு வராமல் தடுக்கும் என்பதும் உண்மை தானே? சுமி தன்னை மிகுந்த அதிர்ஷடசாலியாக நினைத்தாள். திருமணத்திற்கு முன்பே அரவிந்த் தனக்கு உறுதுணையாக இருக்கிறானே என்று பெருமை கொண்டாள். பிறகு யாருக்கு கிடைக்கும் இவ்வாழ்வு?
மனபொருத்ததில் அமையும் திருமணத்தை விட சூழ்நிலையினால் அமைவதும் சிறப்போ?
கூந்தல்
நீண்ட கருங்கூந்தல் கொள்ள ஆசை தான், ஆனால் ஆங்கே என்னையறியாமல் குடி கொள்ளும் உயிர்களிடம் மட்டுமே வெறுப்பு
காணிக்கையாக கொடுத்தாலும் சிறப்பு தான் போட்டியில் தோல்வியை ஒப்புக்கொண்டு அளித்தாலும் சரி தான்
கூந்தல் வளர்ப்பில் மட்டுமே ஆண்கள் பெண்களிடம் முழு நேரம் வாதம்/ விவாதம் செய்யாமல் இருப்பதும் உண்மை தான்
அது இல்லோதோரின் தவிப்பிற்கு வடிகாலே செயற்கை கூந்தலும் செயற்கை கூந்தல் வளர்ப்பும்
பெண் பார்க்கும் நேரத்திலும் ஆணின் கண் தேடும் ஓர் இடம் கூந்தலே
தோற்றத்தின் முழுமையும் கூந்தலே அது அளவில் சிறிதானலும்
உனக்கு வர்ணம் பூசி அழகு பார்ப்பதும் நான் தானே வடிவமைப்பதும் நான் தானே
வெறுப்போரி டம் வளர்வதும் ஏங்குவோரிடம் சளைப்பதும் ஏனோ
இருந்தாலும் கஷ்டம் இல்லையென்றாலும் கஷ்டம்
காய்ந்த பூவில் முருங்கைகாய்
மற்றொன்று சாதாரண பூ.முதன்
முறையாக பார்த்தேன்.பாட்டி
வேறுப்படுத்தி காட்டினர்.அது போல்
பலவற்றை உள்ளடக்கிய
இயற்கையை கண்டு வியந்தேன்.
பூக்கும் பூவிலே அது காயா கனியா
என வேறுப்படுத்திய இயற்கை
ஆழ்ந்து சிந்திக்க பல ரகசியங்களை
பதுக்கிய புதையலாக அமைதியில்
ஆழ்ந்து உறங்கும் குழந்தை போல்
ஆத்திரத்தில் தலைவிரித்து ஆடும்
பேயாக மகிழ்ச்சியில்
பூத்துக்கூழுங்கும் மங்கை போல்
அழுக்கையில் ஊரே நனைய பல
வேசங்கள் பூண்டாய் பல ரகசியங்கள்
கொண்டாய். நின்று ரசிக்க பல
வேசங்கள், கோஷங்கள் போட ஐந்து
கோசத்தை அடக்க வேண்டுமோ.
கிறுக்கல்கள்
நம் சிந்தனையை திசை திருப்ப உருவான கிறுக்கல்களும்
தூசியில் நம் மனம் போல ஓர் வடிவம் உருபெற எழும் கிறுக்கல்களும்
வீடு கட்டும் மணலில் கை விரல்கள் சுழல பதிக்கும் கிறுக்கல்களும்
கடல் அலைகளுக்கு நடுவே எழுதும் பெயரும் மனம் மகிழ வரும் கிறுக்கல்களும்
வகுப்பு நேரத்தில் புத்தகத்தில் நம்மை மறந்து வடிக்கும் கிறுக்கல்களும்
முகம் பார்க்கும் கண்ணாடியில் அழகு சாதன பொருட்கள் கொண்டு எண்ணம் வண்ணமாக மாறும் கிறுக்கல்களும்
தன்னை ஆசானாக நினைத்து பிஞ்சு விரல்கள் கொண்டு கரும்பலகையில் நடனமாடும் மழலை செல்வங்களின் கிறுக்கல்களும்
நீர்த்திவலைகளை ஒன்றிணைத்து நாம் ரசித்து வரையும் கிறுக்கல்களும்
தரையில் நீரில் தாண்டவம் காட்டி வரையும் கோலங்களும் கிறுக்கல்களும்
வெண்பனியில் உருவாக்கிய மாயையில் எழுதும் கிறுக்கல்களும்
மறந்து போய்விடுமோ என்றெண்ணி சுவரில் ஆக்கிரமித்து இருக்கும் சித்திர எழுத்துக்களும் கிறுக்கல்களே!
இந்த கிறுக்கல்கள் யாவும் நம் நினைவு விட்டு நீங்காத விலை மதிப்பற்றவையே என்றாலும் அந்த நேரத்தில் அந்த கிறுக்கல்களுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்
எதிலும் வித்தியாசமான சிந்தனை
படைத்தலில் பரிமாறுதலில் புதுமை
மாற்றி யோசிக்க எல்லாவற்றிலும்
தனியாக உற்று பார்த்தால் மட்டுமே
அதை கண்டுபிடிக்க முடியும்
பாமரனக்கு சொன்னால் ஒழிய
விளங்காது புரியா புதிராக விளங்கும்
காட்சிகள் அதை விளக்கி காட்ட ஆள்
தேவை ஆம் ஆள் தேவை விளங்காத
வினாக்களுக்கு விடைகாண அரிய
படைப்புகளின் ஆழம் அறிய புள்ளியை
கோலமாக்க பயிற்சிக் கொடுக்க
ஆள் தேவை
மழையின் நினைவு
எனக்கு ஆறு குழந்தைகள். பள்ளிக்கூடம் விட்டு என் பிள்ளைகள் நான்கு மணிக்கு திரும்பி விட்டாலும் படிக்க உட்காருவது என்னவோ மாலை ஆறு மணிக்கு தான். பாரதியார் சொன்னது போல மாலையில் வந்ததும் விளையாடச் செல்லும் அவர்கள், அரை மணி நேர ஓய்வுக்கு பிறகு சுவாமி முன் அமர்ந்து பக்தி பாடல்கள் பாடிய பிறகு அன்றைய வீட்டு பாடத்தை எழுதவும் படிக்கவும் ஆரம்பிப்பார்கள்.
அன்றும் அப்படித்தான். . அந்த மாலை வேளையில் அவர்கள் பாடம் படிக்க உட்கார, மேகங்கள் திரண்டு, மின்னல் கண்களைப் பறிக்க, குளிர் காற்று வீச , மழைக்கான அத்தனை அறிகுறிகளும் தென்பட சரியாக ஏழு மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்தது.
இயற்கைக்கு என்றும் நாம் அடிமைதான். அதன் ஆக்ரோஷத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. அன்றைய மழை சாதாரண மழை அல்ல. பேய் மழை போல கொட்ட ஆரம்பித்தது. வீட்டிற்கு வெளியே நிற்பதும் வீட்டிற்குள்ளே இருப்பதும் ஒன்றாகவே இருந்தது . சாதாரண மழையன்றால் என் பிள்ளைகளை அடக்கி வைத்திருக்க முடியாது . மழையில் நனைவதும் ஆட்டம் போடுவதும் அவர்களுக்கும் எனக்கும் நிறைய பிடிக்கும்.
மழையை முதலில் பிள்ளைகள் ரசிக்க, கூடவே நானும் அதில் மயங்கினேன் என்பதுதான் உண்மை.
அந்த பேய் மழைக்கு கூரை வீடு மட்டுமல்ல காரைவிடும் ஆட்டம் கண்டது. மழை
ஆரம்பிப்பதற்கு முன்னரே வீட்டிலிருந்து சில பல பாத்திரங்களை நான் அடுக்கி வைத்து காத்திருந்தேன் . மழை வந்ததும் வீட்டில் ஆங்காங்கே ஒழுகும் இடங்களில் அண்டாவையும் அதனைச் சுற்றி சின்ன பாத்திரங்களையும் வரிசையில் வைக்க வீட்டில் வேறுபட்ட ஓசைகள் ஒலித்து அங்கே ஜலதரங்க இசை அரங்கேறியது. வீடு புள்ளிகள் வைத்த கோலமாய் மாறியது. இது காணாதென்று வீட்டிற்கு வெளியே விழும் மழை தண்ணீரை சேமிக்கும் பொருட்டு ஒரு துண்டை மட்டும் தலையில் கட்டிக்கொண்டு குடங்களை அடுக்கி வைத்து தண்ணீர் பிடித்தவையும் மறக்க முடியாது .
அவ்வளவாக மின்சார வசதியில்லாததால் ஒற்றை மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றி அதனை சுற்றி நாங்கள் அமர்ந்து, ரசித்து அவரவருக்கு தெரிந்த பாடல்களை பாடியும் அன்றைய மழையை கொண்டாடினோம்
அப்படி அன்றைய மழையை ரசித்து கழித்த நினைவுகளை பாட்டி கோமதியம்மாள் தன் பேரப்பிள்ளைகளுடன் பகிர , "பாட்டி! நீங்க ஏன் பாட்டு பாடினீங்க? அலைபேசியில் பாட்டு போட்டு விட்டால் அது பாடி இருக்குமே?" என அறியாமல் ஒரு பேரப்பிள்ளை கேட்க, "அந்த காலத்தில் அது இல்லையேப்பா" என்று பதில் தந்தாள் பாட்டி. அவள் பதில் சொல்லி முடிப்பதற்குள் இன்னொரு பேத்தி "மழை தண்ணீர் வீட்டில் விழாதபடி மேலே ஏதாவது போட்டு மூடி இருக்கலாமே அல்லது புது வீடு கட்டி இருக்கலாமே ?" என்று கேட்க, அதற்குள் அடுத்த பேரன்" பாட்டி! நீங்க யுபிஎஸ் போட்டால் வீட்டில் கரண்ட் போகாது. மெழுகுவர்த்தியும் வேண்டாமே! ஏன் நீங்கள் அதை செய்யவில்லை?" என்று கேட்க " அந்த காலத்தில் எங்களுக்கு தார்பாய் வாங்க கூட வசதி இல்லை. அதுவும் யுபிஎஸ் வசதி இல்லை . ஒரு சிறிய மஞ்சள் குண்டு விளக்கு மட்டுமே வீட்டில் எரியும் . மின்விசிறியும் கிடையாது." என்று சொல்லி பாட்டி தன் பேரப் பிள்ளைகளை அணைக்க. அன்றைய தினத்திற்குகான ஷூட்டிங் முடிந்ததாக இயக்குனர் சொல்ல, ஹே ! என்று குதூகுலத்துடன் ஓடிய பிள்ளைகள் தத்தம் அலைபேசியை எடுத்து விளையாட சென்றனர். பாட்டி மட்டும் தனிமரமாகவா நின்றாள்? அவளும் தன் அலைபேசி எடுத்து காதில் ஹெட்போன் மாட்டிகொண்டு பேஸ்புக்கில் நுழைந்தாள்.
மழையின் நினைவுகளை பற்றி அறியாத இக்கால குழந்தைகளுக்கு பாட்டி கோமதியம்மாள் சொல்லும் விதமாக கொண்டு செல்லப்பட்டது தொலைக்காட்சியின் "மழைத்துளி" நிகழ்ச்சி.
மழையின் நினைவுகள் மறாது. மறக்கவும் முடியாது
தண்ணீரில் மிதக்கும் கப்பல் அதில்
பல கனவுகளுடன் ஏறும்
மனங்கள்.புத்தகங்களை சுமந்து
நின்றிருந்த பேழைக்குள் புகுந்து
அலைமோதிய மக்கள் கூட்டம்.ஒரு
அழகான அனுபவம்.கப்பலில் நடந்த
புத்தக கண்காட்சி அழகு.
எப்படியெல்லாம் படிக்கும் ஆர்வத்தை
தூண்டும் நடவடிக்கைகள்.
திண்படங்களை வாங்குவதை போல
புத்தகங்களை வாங்கி குவித்த
இளவட்டங்கள். ஆர்வக்கோளரில்
புத்தகத்தில் மூழ்கி குடும்பத்தை
மறந்தேன்,கைப்பேசியில் தொடர
முடியவில்லை. தேடி வந்த மகள்
நக்கலாக அழுவாதீங்க.இன்னொரு
கண்காட்சியில் கட்டு கட்டாக
புத்தகத்தை வாங்கி செல்வதை
பார்த்து வியப்பு, ஆச்சரியம்,
சந்தோஷம்.மொத்தமாக 31 புத்தக
விருந்தாளிகள் புதியதாக வந்து
சேர்ந்தன இல்லத்தில் சொத்தாக
சின்ன வருத்தம் தாய்மொழியில்
ஒன்றுக்கூட இல்லை.
தொலைவு
பிறப்பு கொண்டதால் இறப்பிலிருந்து தொலைவு
மழலை பருவம் முடிந்ததால் குறும்பு செய்வதிலிருந்து தொலைவு
இளமை பருவத்தில் குடும்பத்திலிருந்து தொலைவு
திருமணமான பின் நட்பிலிருந்து தொலைவு
குழந்தை பேற்றுக்கு பின் கணவனிடமிருந்து தொலைவு
பிள்ளைகள் வளர்ந்த பின் கடமையிலிருந்து தொலைவு
முதிர்ந்த பின் பொறுப்பிலிருந்து தொலைவா?
இல்லை.
தொலைவாக இருக்கும் போது ஈர்ப்பும் பக்கத்திலிருக்கும் போது எதிர்ப்பும் இயல்பே.
சிட்டுக் குருவிகளாக சுற்றித் திரியும்
எண்ணங்கள் சிறு இடம் கிடைத்தால்
போதும் அடைக்கலம் புக. வானுயர
கம்பங்களே எங்கள் புகழிடம்.
கொடியில் ஆடும் இலைகளை போல்
காற்றில் ஆடுவோம் எங்களுக்கு
அதுவே ஊஞ்சல் . சிறு பருக்கை
போதும் பசியாற்ற. உறக்கத்தை தவிர
முழு நேரமும் பாட்டு பாடுவோம்
கேட்பார் இல்லை.சூரியன் எங்கள்
பக்கத்திலே ஆனாலும் சுடுவதில்லை.
எண்ணங்களால் சிட்டுக் குருவியை
வடிக்கலாம்.எண்ணங்களே
சிட்டுக்குருவியானால்..
தொடக்கமும் முடிவும் யார் கையில்?
பூரிப்பும் துக்கமும் யார் கையில்?
புரிதலும் மாறுதலும் யார் கையில்?
ரசிப்பும் ரகசியமும் யார் கையில்?
நாவின் ருசி யார் கையில்?
வளர்ச்சியும் சரிவும் யார் கையில்?
வருகையும் விலகளும் யார் கையில்?
பிறப்பும் ஈர்ப்பும் யார் கையில்?
உணர்வும் காரணமும் யார் கையில்?
விடையறியா விந்தை வினாக்களும்
விடையும் யார் கையில்?
நேற்று இந்த திரைபடம் பார்த்தேன்.
பலாப்பழத்தின் கதையா என்று
ஆசையுடன் பார்க்க அதற்கு எந்த
விதத்திலும் ஏமாற்றமில்லை.நல்ல
நகைச்சுவையான படம்.
நகைச்சுவையாக பலாப்பழத்தின்
வெளிப்புறத்தைப்போல் இருக்கும்
சமூக சாவல்களை,ஈட்டிக்களை
பெண்ணின் முக்கியத்துவத்தை
பலாச்சுளை போல் சுவையாக
படைத்து யதார்த்தமான வாழ்க்கை
நிகழ்வுகளை காட்டிய படம்.இன்னும்
இவை அரங்கேறுகிறதா?? இரட்டை
அர்த்த வார்த்தைகள் மட்டும் குறை.
பலாப்பழத்தில் ஊசிக் குத்துவது
போல் வசனங்கள்.மொத்தத்தில்
ஆழமான சமூக கருத்தைக் கொண்ட
நகைச்சுவை படம்.
எது பொக்கிஷம்?
குழந்தை பருவத்து ஆடைகளை பத்திரமாக வைத்திருப்பதும் பொக்கிஷமா?
அறியாத வயதில் தெரியாமல் கிறுக்கிய படத்தை ஓவியம் என்று காப்பதும் பொக்கிஷமா?
வீட்டில் நம் இளவரசி கால் தடம் படித்த இடமும் பொக்கிஷமா?
பள்ளி காலத்தில் நாம் எடுக்கும் குழு புகைப்படமும் பொக்கிஷமா?
நம் தனித்துவத்தை உணரச் செய்யும் அந்த நாளும் பொக்கிஷமா?
நம் ஸ்தானத்தை உலகம் அறியச் செய்யும் அந்த தருணமும் பொக்கிஷமா?
இளவயதில் முதன் முதலில் பகிர்ந்த காதல் கடிதமும் பொக்கிஷமா?
புத்தகத்தின் நடுவே சிறையிலிட்ட அந்த மயிலிறகும் பொக்கிஷமா?
பிடித்த ஆடையை பத்திரப்படுத்தி வைப்பதும் பொக்கிஷமா?
ஆறடி நிலமே சொந்தமானாலும் சலிக்காமல் ஆசைப்பட்டு குவிக்கும் சொத்தும் பொக்கிஷமா?
எது தான் பொக்கிஷம் ?
வயதான பெற்றோரை முதியோர் விடுதியில் விடுவதை விட அவர்களை நம் கைக்குள்ளே காப்பது தான் நம் பொக்கிஷம்.
இதில் ஆண் பெண் பேதமில்லை.
இருக்கும் வரை உழைப்பை கசக்கி பிழிந்து அவர்களை இழந்த பிறகு அழுவதில் இல்லை நம் உணர்ச்சி.
இழந்ததை மீட்டு தர மீண்டும் அவர்கள் பிறந்து பொக்கிஷமாக மாறும் வாய்ப்பும் இல்லை.
திருவாளர்களின் நாள்
காலையிலிருந்தே சிடு சிடு என்றிருந்தாள் நந்தினி. காரணம் தெரியாமல் முழித்தேன். நான் எந்த கேள்வி கேட்டாலும் பதில் முறைப்பும், " டப்" என்றே சத்தமே பதிலானது. இருந்தாலும் என் காலை தேவை பூர்த்தியாக வேண்டி ஏதும் பேசவில்லை நான். அவளுடைய அவசரமும் புரிந்தது. வேலைக்கு போகவில்லை என்றாலும் காலை நேரம் பரபரப்பானது தானே? ஏதோ இனிப்பு செய்கிறாள் என்று அதன் நெய் மணம் உணர்த்தியது. சரி பலாப்பழம் பழுத்தால் தெரியத்தானே போகிறது என்ற இறுமாப்பில் இருந்தேன் நான். ஆனாலும் படபடப்பை அறிய ஆவல் கொண்டு மெதுவாக நெருங்கினேன் அவளை, காலை வேளையிலேயே பதில் ஏதானலும் பரவாயில்லை என்ற மனத்தோடு.
"என்ன இன்று விசேடம் " என்று கேட்டவுடன், "இன்னிக்கி கல்யாண நாள்" என்று பதில் வந்தது கொஞ்சம் புன்முறுவலோடு. அப்போதாவது சுதாரித்தேனா, "யாருக்கு" என்று நான் மீண்டும் கேட்க, "நந்தினிக்கு" என்று முறைப்போடு பதில் வந்தது. "இருக்காதே! அவளுக்கு காதலர் தினத்தன்று தானே கல்யாணம். நான் கூட அவள் கல்யாணத்திற்கு போயிருந்தேனே. ரொம்ப தடபுடலாக நடந்த கல்யாணமுன்னு பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல பேசிக்கிட்டாங்களே!" என்று நான் என் நினைவலைகளை வருட, நந்தினியின் கையிலிருந்த பாத்திரம் என் உடல் முழுவதுமாக வருடியது. "அப்போ நடந்த நந்தினியின் கல்யாணம் ஞாபகம் இருக்கு, ஐந்து வருடத்திற்கு முன் நடந்த கல்யாணம் நினைவில்லையா? யார் அந்த நந்தினி? " என்ற கோபத்தோடு அவள் கத்த, அந்த நந்தினி என் ஒண்ணு விட்ட அத்தை பெண் என்பதை நான் என் நந்தினிக்கு உணர்த்த பாடாதபாடு பட்டுவிட்டேன். "ஆமா. அவா கல்யாணம் நினைவிருக்கு , நம் கல்யாண நாள் நினைவில்லையாம்" என்று என் மோவாயில் குத்தினாள் என் நந்தினி.
போன மாதம் இரண்டு பட்டு புடவைகள் திருமண நாளுக்காக நல்லியில் வாங்கியது இப்போது ஞாபகம் வந்து தொலைந்தது. மீண்டும் நந்தினியை இல்லை இல்லை என் செல்லத்தை நெருங்கினேன், என் திருமண நாளை அன்றைய காப்பியோடு ஆரம்பித்து கொண்டாட, நந்தினி அனுமதி கொடுப்பாளோ? என்ற சந்தேகத்தோடும் ஏக்கத்தோடூம்.
படித்ததில் பல, நடந்ததில் சில
சிந்திக்க செய்தது.
காலையிலிருந்து படபடவென
பொரிந்து தள்ளிக்கொண்டே காலை
கீதம் ஆரம்பிக்கிறது ஒவ்வொரு
வீட்டிலும் சொன்னதை செய் என்று
அவர் நன்மைக்காக நாம் பாட்டு
பாடினாலும் நமக்கே அது பின்பு
பெரிய குறையாகி போகும்.
குறைகளை விடுத்து சின்ன
சின்ன நிறைகளிடம் நம் கவனத்தை
செலுத்த முயற்சித்தால் என்ன?
அம்மா இதை நீங்க
கவனிக்கவில்லையா? இதை மாற்றி
இருக்கிறேன்.முழுவதும் நான்
தவறில்லை என சொல்லும் போது
எங்கோ குத்துக்கிறது. காலையில்
எவ்வளவு ஆர்ப்பாட்டமாக போனாலும்
மாலையில் செல்லமாக வந்து
கட்டித்தழுவும், எதையும் தூசன
தட்டிச்செல்லும் இந்த
தலைமுறையிடம் கற்க வேண்டியவை
பல.(Instant I love you, thank you and
sorry..கோபத்தில் திருப்பிப்போடு😄
உடனடி சரவெடி)
தினமும் செய்ததே செய்து செய்து
இறந்த காலத்தையும்,
எதிர்காலத்தையும் முடிச்சுப்போட்டுக்
கொண்டு நிகழ்காலத்தை மறைந்து
அனுபவிக்க மறக்கிறோமோ ...
தினமும் புதுசு புதுசாக தேடி திரியும்
இந்த பட்டாம்ப்புச்சிகள்
நிகழ்காலத்தை ரசிக்க நாமும்
துணையாக ரசிப்போமா..
சப்தம்
ஆழ்ந்த உறக்கம் கொள்ள நினைக்கும் வேளையில் மின்விசிறி எழுப்பும் அதீத சப்தம்
அதனின்று அசையும் நாட்காட்டியின் இசைபாடும் சப்தம்
வேகமாக வீசும் வெளிகாற்றில் அருவி போல் மர இலைகள் ஊடல் கொள்ளும் சப்தம்
அமைதியான நேரத்தில் பல்லிகள் இடும் சப்தம் அதனின் பிறக்கும் மன பயத்தின் சப்தம்
மழை காலங்களில் தவளை எழுப்பும் வகை வகையான சப்தம்
இவை யாவும் மறந்த வேளையில் நம் காதில் ஒலிக்கும் அடுத்தவர் குறட்டை சப்தம்
என்ன சத்தம்?
மனம் பதைபதைத்தது அது என்ன என்று அறிய ஆவல் மேலிட்டது
தருணம் சந்தேகப்பட வைத்தது அருகில் தன்னை அறியாமல் உறங்கியவரிடம்
மின்னலானது அறிவில் எட்டிவிட்டது
காது கொடுத்து கேட்டதும் உண்மை புலப்பட்டது
மனமும் கண்டு கொண்டது அது அடுத்த வீட்டிலிருந்து வெளிப்பட்ட குறட்டை சத்தமென்று
ஒரே படபடப்பு அந்த நேரத்தை கடக்கும்
போது தினமும் காலை ...பரிட்சை
நேரமா.. இல்லை.
எல்லாத்தையும் காலம் தவறாமல்
செய்தே பழகிப்போச்சு என்ன செய்ய.
எத்தனை முறை சொன்னாலும் புரியல
புத்திக்கு...
தாமதமாக போன என்ன? ரொம்ப
யதார்த்தமான தலைமுறையுடன்
ஒத்துப்போக முடியவில்லை.எதையும்
எளிதாக எடுத்துக்கொள்ளும்
மனப்பான்மை, எதுவாக இருந்தால்
என்ன..ரொம்ப தெளிவாக இருக்கும்
இந்த தலைமுறை கண்டு
கத்துக்கொள்ள வேண்டியவை
இருந்தாலும், புரியல இந்ந புத்திக்கு
எப்போதும் பரபரவென எத்தனை
முறை சொல்ல மாறி வருகின்றன
பழக்கத்திற்கு உன்னை
பக்குவப்படுத்திக் கொள்ள அவரை
மாற்ற முடியுமோ !இல்லையோ!
உன்னை நீ அமைதிப்படுத்திக்
கொள்.நடப்பது நடக்கத்தான்
போகிறது. எதற்கு படபடப்பு, பரபரப்பு..
மனமே ரிலாக்ஸ் என்று எத்தனை
முறை படித்தாலும் நடைமுறைக்கு எது
சாத்தியம்??
கடிகாரத்தில் நொடிக்கு துடிக்கும் முள்
நிமிடத்திற்கு நகரும் முள்,மணிக்கு
நகரும் முள்..இப்போது அந்த நொடி
முள்ளே இல்லையே.நின்று
நிதானமாக செல் படபடக்கதே..நீ
இல்லையென்றாலும் சுற்றுவது
சுற்றும் .கொஞ்சம் நின்று தான் பார்
உன்னை உனக்கு புரியுமில்ல.
சின்னஞ்சிறு குஞ்சுகளுக்கு குடையானதோ கோழி(தா)யின் இறக்கை
வாழ்க்கை பாடத்தில் முதல் அத்தியாயம் சூழ்நிலையை சமாளிப்பது எப்படி என்று சொல்லித் தருகிறது தாய் கோழி
காலநிலை மாறலாம்
மனிதர்களிடம் சிக்கலாம்
என்னிடமிருந்து பிரிய நேரிடலாம்
இரை தேடுவதில் சிரமம் ஏற்படலாம்
ஆனாலும் குப்பை கிளறி உணவு சேகரித்து உண்பதை விட்டு விடாதீர்கள். உழைப்பே உயர்வு தரும் என்கிறது தாய் கோழி
திண்டாட்டத்திலும் கொண்டாட்டம் தாயின் அரவணைப்பில் ஆட்டம் போட்ட பிஞ்சுக்கால்கள்
முகம் காட்டா குஞ்சுகள் அம்மாவின் உடலில் எதை தேடுகின்றன?
தாங்கள் வந்த இடத்தையா?
இல்லை
மழையில் நினைந்து அசந்து விட்டாதால் போடும் குட்டி உறக்கமா?
இல்லை
தங்களை காப்பாற்ற தாய் இருக்கிறாள் என்ற நினைப்பா?
இல்லை
தாயின் உடல்சூட்டில் குளிர் காய்கின்ற எண்ணமா?
இல்லை
எதிரிகள் வந்துவிட்டதால் அங்கே தஞ்சாமா?
அதன் பாஷை தெரிந்திருந்தால் அறிந்து கொண்டிருப்பேன் அந்த ரகசியத்தை,
நானும் அதனிடம் இல்லாத உறவை உயிர்த்திருப்பேன்.
"வா! வா! சீக்கிரம், யாராவது பார்த்து விட போகிறார்கள்" என்றே தன் ஒவ்வொரு குஞ்சையும் வாரி தன்னிடம் வர வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது தாய் கோழிக்கு. "அம்மா! இவ்வளவு அவசரமா நாம் எங்கே போகிறோம்?" என்று கேட்ட ஒரு குஞ்சுக்கு தன் முறைப்பை பதிலாக சொன்னது தாய்.
சிறிது தூரம் அமைதியான நடையோடு தாயை தொடர்ந்தன குஞ்சுகள். மறுபடியும் இன்னொரு குஞ்சு தங்களுடைய பயணத்தின் காரணம் அறிய தாயிடம் வினவ, ஏதோ முணுமுணுத்த தாயை மேலும் கீழும் பார்த்தது. மீண்டும் மௌன நடை பயணம். அதற்குள் மேகம் திரள மழைக்கான அறிகுறி. தாய் குஞ்சுகளிடம் சொன்னது, "இனி யாரும் எந்த கேள்வியும் கேட்க கூடாது. மழை வருவதற்குள் நம் இடத்தை அடைய வேண்டும் " என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய இடி மண்ணில் இறங்க, தலை தெறிக்க நாலா பக்கங்களிலும் குஞ்சுகள் சிதறி ஓட, தாய் மட்டும் தனி மரமானது. அங்கே தாய்க்கு அனுபவம் பேசியது.
மறுபடியும் தன் பாஷையில் குழந்தைகளை அழைக்க, ஒவ்வொன்றாக தலையை வெளி காட்டி பயணம் தொடர்ந்தது.. ஆனால் ஓரிரு நிமிடங்களில் பயணம் தடைபட மழை பொழிய காத்திருந்தது. இம்முறை ஏது வந்தாலும் தான் பார்த்து கொள்வதாக தாய் வாக்கு அளிக்க தாயுடன் அமைதிப் பயணம்.
லேசான சாரலில் தொடங்கி மழை வர ஆரம்பிப்பதற்கு முன்னால் கோழி கூட்டம் நினைந்து போய்விட, குஞ்சுகளை தன் இறக்கை விரித்து தஞ்சமடைய செய்தது தாய் கோழி.
அப்போதும் தங்கள் பயணத்திற்கான சந்தேகம் அவைகளுக்குள் எழ, தாய் கோழியே விடை சொன்னது. "நான் சொல்லும் போதே சீக்கிரம் புறப்பட்டு இருந்தால் இந்நேரம் வேறு வீட்டிற்கு போயிருக்கலாம்" என்று சொல்ல , "ஏன் நாம் இருந்த இடமே நன்றாக தானே இருந்தது. ? பிறகு எதற்கு நாம் வேறு வீட்டிற்கு போக வேண்டும் ?" என்று ஒரு குஞ்சு கேட்க, "இல்லைம்மா. நாம அங்க இருந்தா நான் இறந்து போயிருப்பேன். நாளைக்கு என்னை சாமிக்கு பலி கொடுக்கிறதா அவர்கள் பேசிக் கொண்டார்கள். என் உயிருக்கு நான் பயப்படவில்லை. ஆனால் நீங்கள் சிறியவர்கள். உங்களை இப்ப ஒன்றும் செய்யமாட்டார்கள். நான் உயிர் விட்டபிறகு உங்களை யார் காப்பாற்றுவார்கள். அப்பாவிற்கு கஷ்டம் தானே? அதான் உங்களை அழைத்துக் கொண்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவு செஞ்சேன். அப்பாவுக்கு கூட சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல அப்பாவும் வந்துடுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குஞ்சுகளின் தந்தையான சேவலாரும் வந்து சேர்ந்தார்.
தற்போது மழையின் காரணமாய் நடைக்கு விடுப்பு கொடுத்து பக்கத்திலிருந்த கோயிலில் தஞ்சமடைந்தனர் குடும்பத்தார்
மழையானலும் குளிரானலும் தேடும்
தாயின் அரவணைப்பு அது எல்லா
ஜீவனுக்கும் ஒன்றே.ஒற்றுமையின்
சான்று குருவி கூடானாலும்
இறகானலும் அதில் அனைத்தும்
சமம்.வெற்றியிலும் தோல்வியிலும்
தேடும் ஓர் இடம் அம்மா.அவளுக்கே
தெரியும் சரியான நேரத்தில்
அணைக்கவும் விரட்டவும்.உலகை
சொல்லி தரும் முதல் குருவும்
கடைசியும் அவளே.கேட்டத்தை வாங்கி
தரும் அப்பாவிற்கு நடுவில்
வில்லியாக தெரிந்தாலும் காலம்
பதில் சொல்லும் அவள்
கண்டிப்புக்கு..அடைக்கலத்தின் சாட்சி
இந்த படம் மாட மாளிகை எதுவும்
நிரந்தரமில்லை ஆபத்தில் இன்னும்
வியப்பூட்ட செய்யும் காட்சி ஒரே
நேரத்தில் பல குட்டிகளுக்கு
உணவாட்டி ஒரு சலனமும் இல்லாமல்
இருக்கும் தாய்.தாயிடம் எதுவும்
சாத்தியமே ...
என்னை எழுப்பிய அகிலாவிற்கு,
தமிழ் பேச்சில் செழுமையோ? தட்டி கொடுக்கும் திறமையோ?
ஆங்கிலத்தில் வல்லமையோ? அடுத்தவரை வடிவமைக்கும் விதமோ?
ஏற்றி விட்ட தீபமோ? அதுவும் அணையாமல் காக்கும் சுடரோ?
காக்கும் கரங்களோ? கரத்தை ஆயுதமாய் மாற்றும் கலையோ?
அடுத்தவருக்கு உதவும் குணமோ? தேவையறிந்து கொடுக்கும் பண்போ?
ஆதரவற்ற மனதிற்கு பாதுகாப்போ? நல்லதை தூண்டிவிடும் உணர்வோ?
பூ போன்ற புன்னகையோ? என்னுள் சிந்தனையை பூக்க வைத்த மனமோ?
மெய் வருடும் பூங்காற்றோ? அடக்கத்தால் என் மனதை தடுமாற வைக்கும் சூறாவளியோ?
ஆக்கத்திற்கு வழி கோலும் திடமோ ?பிறர் மனம் அறிந்து செய்யும் செயலோ?
செயலை பகிர்ந்து அளிப்பதும் கடமையோ? பாரா முகம் இல்லாமல் காட்டும் கருணையோ?
ஊக்கத்திற்கு காட்டும் பச்சைக் கொடியோ? அழிவிற்கு விடை கொடுக்கும் நெஞ்சமோ?
உங்கள் பேச்சை ரசித்துப் பார்த்த நாட்களோ? என்னுள் மறக்க முடியாத நினைவோ?
பித்தாகும் மனம் பித்தாகும் கண்ணில்
கண்ட காட்சிகளுக்கு மனதை ஒத்த
காட்சிக்கு நம்மை அறியாமல்
அதுவாக உருவகப்படுத்தி பித்தனை
போல் ஆட பாட செய்யும்.நிஜத்திற்கும்
நிழலுக்கும் வித்தியாசமில்லாத
காதல் கண்டு பித்தாகி ஏமாற
செய்யும்.
காணும் காட்சி நிஜமானல் காற்றில்
அலையும் பட்டம் போல் ஆடும் மனம்.
அதையே உலகென வாழும்
பித்தர்களுக்கு தெரியாது
அது நிழலென்று .அது நிஜத்தில்
சுடுமென்று.
ஜோடி சேர்ந்த நாள் மட்டுமே கைப்பிடித்தேன் அவளை, காரணம் தெரியாமல் விலக்கி விட்டாள், அதனால் நான் விலகியும் விட்டேன் அவளிடமிருந்து
முன் வைக்கும் காலை பின் வைக்க வேண்டாமென்று நினைத்தோ ஏனோ காளை பின் தொடர்கிறது
நான் மறுத்த வேளையிலும் எனை மணந்தான், மணந்த பின் மறந்தான், ஏன் என்ற கேள்விக்கு பதிலும் சொல்ல மறுத்தான்
மண நாளில் கைப்பிடித்தவனுக்கு அவள் மரணம் பதிலானது, அவள் மனம் வேறோருவரிடத்தில் தஞ்சம் கொண்திருந்ததால்
மண நாளில் கொண்ட மாலை என் கழுத்தை பதம் பார்த்தது கோடை காலத்தில், தவித்தேன் தவிர்த்தேன் கழற்றி வைக்க முடியாமல் , மனம் இல்லாமல்
மண நாளில் கைபிடித்தவனுக்கு சொந்தமானது பச்சை கிளியின் கரங்கள் மட்டும்
புத்தகத்தை நாம் படிக்கிறோம் என்று
நினைகிறோம் ஆனால் புத்தகம்
நம்மை படிக்க செய்கிறது நாம் ஏங்கி
போன,தேங்கி போன இடங்களை
நம்மை நமக்கு காட்டும் கண்ணாடி.
கேட்டதில் பிடித்தது எவ்வளவு
உண்மை.
படி நித்தம் படி எதையேனும் படி
உன்னை படி என்னை படி
உலகம் படி நிறுத்தாமல் படி
நீ உலகை சுற்ற வேண்டாம்
அது கூட்டிச் செல்லும் உன்னை
அம்மாவின் தியாகம்
முதுமையின் காரணமாக வசுமதியின் சித்தி இறந்து இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது . வசுமதி பிறந்த ஒரு வருடத்திலேயே அவள் அம்மா இறந்துவிட , அவளை வளர்க்க வேண்டி உறவினர்கள் வள்ளியை இரண்டாவதாக அவள் அப்பாவிற்கு மணமுடித்து வைத்தனர். வசுமதியின் அம்மா மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த அவள் தந்தைக்கு மறுமணத்தில் விருப்பமில்லை என்றாலும் உறவினர்களுக்கும் ஊராருக்கும் மட்டுமே சித்தி வள்ளியை திருமணம் செய்து கொண்டார். சித்தி வள்ளியும் வசுமதிக்கு தேவையானதை தாயின் இடத்திலிருந்து செய்ய ஒரு நாளும் தவறியதில்லை. ஆனால் வசுமதியோ சித்தியை தவிர்த்து வந்தாள். இதற்கு காரணம் சித்தியானவள் கொடுமைக்காரியாக இருப்பாள் என்பதை கேட்டு கேட்டு வளர்ந்தவள் வசுமதி. மேலும் வீட்டிற்கு வரும் உறவினர்களும் வள்ளி எப்படி பார்த்துக் கொள்கிறாள் என வசுமதியிடம் கேட்பதோடு , பெற்ற தாய் போல சித்தி வரமாட்டாள் என்பதயும் அவள் மனதில் விதைத்து விட்டனர் . இது காணாது அவளுடைய அப்பாவும் சித்தியை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருந்ததால் ஏனோ வசுமதிக்கும் சித்தியின் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதற்கிடையே வசுமதியின் அப்பா இறந்துவிட, குடியிருந்த வீடு சொந்தமென்பதாலும் அவருடைய பென்ஷன் பணத்தை வைத்து இருவரும் காலத்தை ஓட்டி வந்தனர் .
சித்தியின் காரியம் முடித்த கையோடு தான் தன் வீட்டிற்கு திரும்ப நினைத்தாள் வசுமதி . போட்டது போட்டபடியே வீடு இருக்க, அதை சுத்தம் செய்ய இன்னொரு நாள் ஒதுக்குவோம் என்று நினைத்து வீட்டை பூட்டிய போது சித்தியின் போட்டோ அவளை ஏக்கமாக பார்க்க, ஏதோ ஒரு பாசம் அவளை மறுபடியும் வீடிற்குள்ளே வர வைத்தது.
அப்பா இல்லாமல் சித்தியும் தானும் கழித்த கடந்த கால வாழ்க்கையும் அவள் கண்ணில் நடனமாட தற்போது வெற்றிடம் தான் குடி கொண்டிருந்தது அந்த வீட்டில் .
தான் தன் குழந்தை பருவத்தில் சாப்பிட மறுத்து அங்கிங்கு ஓடிய காலமும் அதற்கு அப்பாவிடம் சித்தி வாங்கிய திட்டும் அவளுக்கு நினைவுக்கு வந்தது. வீட்டுப்பாடத்தை எழுத வேண்டுமென்றே தாமதப்படுத்தியதும் சித்தியை அலை கழித்ததும் சித்தியின் அன்பும் பொறுமையும், தற்போது தான் பெற்ற பிள்ளையானலும் அதன் சேட்டைகளை சகித்துக் கொள்ள முடியாதவளாய் குழந்தையை அடித்த சம்பவமும் மாறி மாறி நிழல் ஆடியது வசுமதியின் மனதில். அவள் அப்பா நோயுற்ற காலத்தில் கூட சித்தியை ஆயாவாக தான் நடத்தியதை எண்ணி வருத்தம் அடைந்தாள் .
மீண்டும் மீண்டும் வீட்டை வெறித்து பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று மனதை சஞ்சலப்படுத்த, சமையலறையில் இருந்த ஒரு பெட்டி நினைவுக்கு வர, மெதுவாக அதை இறக்கி வைத்தாள்.
பலமுறை சித்தி அதை திறந்து பார்ப்பதும் ஆனால் வசுமதியை பார்க்க அனுமதிக்க மறுத்ததும் தான் அந்த வீட்டில் சித்தியின் அதிகபட்ச அதிகாரம். அன்று பார்க்க முடியாத பெட்டியை இன்று திறந்த பார்க்க வேண்டும் என்று நினைத்த வசுமதி, அதை திறந்து பார்த்ததும் சற்றே அதிர்ந்தாள் . ஆம். அதில் நூற்றுக்கணக்கான கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் பெட்டியை ஆக்கிரமித்திருந்தன.
ஒவ்வொன்றாக பிரித்துப் படிக்க நேரம் காணாதே என்று எண்ணிய வசுமதி கண்ணில் பட்ட டைரியை எடுத்து படித்தாள். அதில் தான் ஏழை வீட்டு பெண் என்பதால் தன் காதலை கைவிட்டு விட்டு வசுமதியின் அப்பாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் மணம் முடித்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.
சித்தியை பலமுறை அப்பா " மலடி " என்று சொன்னாலும் தானும் பல நாட்கள் அவளை அப்படியே அழைத்தது எண்ணி இப்போது கண் கலங்கினாள் வசுமதி.
மேலும் தன் காதல் திருமணத்திற்கு அப்பா எதிர்ப்பு சொன்ன போதும் இவளுக்கு ஆதரவாக சித்தி அப்பாவிடம் பேசியது வசுமதிக்கு நினைவுக்கு வந்தது. கிடந்த கடிதங்களில் பல கடிதங்கள் ஒரே பெயரில் வந்ததை அடுத்து ஒரு கடிதத்தை படிக்க, அதில் திருமணமானாலும் தன் சித்தியை அவள் காதலன் ஏற்றுக் கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அக்கடிதத்திலேயே தன்னை நம்பி ஒரு குடும்பம் இருப்பதாகவும் சொல்லி காதலனுக்கு பதிலும் எழுதி, அதை சித்தி, பத்திரப்படுத்திருந்தது தற்போது வசுமதிக்கு தெரியவந்தது.
சித்தியின் பொறுப்பை எண்ணி அழுகை பீறிட, அந்நேரம் அவள் கணவன் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது , தான் சித்தியோடு இருந்த நாட்களையும் அவள் தியாகத்தையும் அறியாமல் அவளை கொடுமைப்படுத்தியதையும் வார்த்தைகளால் நோகடித்ததையும் கணவனிடம் சொல்ல, மேலும் தங்கள் இருவரும் வாழ்ந்த வீட்டை விற்க வேண்டாம் என்றும் நாமே இங்கே குடி வந்துவிடலாம் என்று சொல்லி குமுறினாள் வசுமதி.
தியாகத்தின் அருமை அன்னையின் ஸ்தானத்தில் வரும்போதுதான் தெரியும் என்பதை உணர்ந்தாள் வசுமதி.
தியாகமும் உணரும்போது மட்டுமே வெளிப்படும்.
அழகே அமுதே அமுதின் மொழியே
மொழியின் வடிவே கிளியே
கிளியின் அழகே அழகின்
உருவே உருவின் மறுபிறப்பே
பிறப்பின் விதியே இறப்பு
இறப்பின் வலியே பிரிவு
பிரிவின் உணர்வே நீ
நீ கடந்த வழியே உனை
உனையே கண்டேன் அதுவே
வாழ்விற்கும் அர்த்தம் சொன்னதே
வருவரர் போவார் இடையில்
இருப்பவர் நினைவுகளை சுமந்து..
மன வலிக்கு மருந்து என்று மனிதன் நினைக்கும் பொருளில் இதுவும் ஒன்றே. மன வலியோடு இதுவும் வளரும் பின்னாளில்
பாதி எரிந்து விட்டதால் உனக்கு மகிழ்ச்சியா? இல்லை நீ விற்று போய் விட்டதால் உன்னை ஈன்றவனுக்கு மகிழ்ச்சியா? இல்லை உன்னை உபயோகித்த மனிதனுக்கு மன மகிழ்ச்சியா? நிறைவாக நிறையோடு உன்னை அனுபவிக்க அதற்குள் மனிதன் போடும் மன திட்டமா?
பாதி கவலை தீர்ந்தது என்றெண்ணி தன் ஆயுளை பாதியாக்கிய மதி கெட்ட மனிதன்.
உன் பாதி ஆயுள் முடிவதற்குள் அனுபவிக்கும் மனிதனின் முழு ஆயுளும் முடியுமோ
மனதை வெள்ளையாக்கும் ஒற்றை வெள்ளை குச்சி
கையில் பிடித்தாலும் உள்ளே இழுத்தாலும் மிகவும் ஆபத்தானவன் இவன்
விடலை பருவத்தில் ஆரம்பிக்கும் நீ விடாது துரத்துவாய் அவன் ஆயுள் முடியும் வரை
காதல் தோல்வியோ?
பிறரை பார்த்து கற்றுக் கொள்வதோ?
ஆனந்தத்தை கொண்டாடவோ?
முன் மாதிரிக்காகவோ?
தன்னை மிகைப்படுத்திக் காட்டவோ?
கவலையை மறக்கவோ?
பிறரை வசீகரிக்கவோ?
விரும்பி தொடங்குவதோ?
நண்பனின் அறிமுகமோ?
ஆழ்ந்து சிந்திக்கவோ?
கற்பனையில் நினையவோ?
கருத்துக்கள் பிறக்கவோ?
புற
அழகுக்காகவோ?
மனதை இலகுவாக்கவோ?
போதைக்காகவோ?
எதற்கு நீ என்னுள் வந்தாய்? காரணம் தெரியா முழிக்கிறேன். உன்னால் நான் அடைந்த இன்பத்தை என் காதலனும் அனுபவிக்க உன்னை அறிமுகமும் செய்தேன்.
உன்னில் என்னை தொலைத்து என்னை நானும் தொலைத்தேனே !
உன்னை உள்ளிழுக்கும் சமையமோ அலாதி ஆனால் நானும் என் வாழ்வும் அங்கேயே சமாதி
ஆலமரத்தின் வேர்கள் படர்ந்து செல்ல.
விழுதுகள் வலுவாக தொங்க .
அதில் அடைக்கலமானவை பல்கி
பெருக. மேலே இருந்து கீழாக வளரும்
விழுது பற்றியவரை தாங்கி தரை
ஊன்ற .கீழே விழுந்த விதைகள் மேல்
நோக்கி வளர .அடுத்த சாம்ராஜ்யம்
உருவாக தயார்நிலையில். பிடித்த
வேர் உடூம்பு பிடியா இல்லை .காற்றில்
சாயுமோ ?அடியை பிடித்து வளருமா?
இன்னொரு ஆலமரம் வருமா ?
நீர் வேண்டுமா? நிலம் வேண்டுமா? ஆகாயம் வேண்டுமா? எதுவும் தேவையில்லை என்றது சூரியன் தன் வெப்பத்தையே தாங்க முடியாமல்
என் son glass ல் sun க்கு glass வைத்து அழகு பார்த்தேன்
மணமகன் தயார். இவனுக்கு ஏற்ற மணப்பெண் இருந்தால் சொல்லுங்கள். இவனுக்கு தேன் நிலவும் கடலில் தான் துணையோடு
செங்கதிரவனுக்கும் கறுப்பு கண்ணாடி தேவையோ? அவனை நேரே கண்டதும் நாம் காணும் காட்சிகள் கருமையாக மாறுவது தெரியாதோ அவனுக்கு,
நிஜத்தின் தோற்றம் சிறியதாய், நிழலின் தோற்றம் பெரியதாய். எனவே நிழலை நம்பாதே உண்மையை மிகைப்படுத்தி காட்டும்
விளம்பரம் எதற்கு கண்ணாடிக்கா? கதிரவனுக்கா? முன்னது வெளிச்சத்தை மட்டுப்படுத்த, பின்னது இருளை கட்டுபடுத்த
மங்கினேனா? மயங்கினேனா? கடலில் சூரியக் கதிரை பார்த்து
கறுத்தேனா? கரைந்தேனா? சூரியனை பார்த்து
கொண்டேனா? கொடுத்தானா? கறுப்பு நிறத்தை
பறித்தானா? பகிர்ந்தேனா? கண்ணை
குளிரூட்டும் கண்ணாடியை
செந்தாமரை விழியாள் ஏந்தும் செந்தாமரை பூவும் ஏந்துவது எதற்கு? அவள் விடை மௌனம் என்பதால் நானும் மௌனமாகிறேன்
பெண்ணாக இருந்திருந்தால் மணந்திருப்பேன் நான், உன் அழகில் மயங்கி
பொம்மையாகிப் போனாயே நீ?
பொம்மையாக இருந்தாலும் மணந்திருப்பேன் நான், நீ பேசா மடந்தை என்பதால்
ஆனால் நிஜத்தில் நீ பெண்ணகிப் போனாயே?
மலர் மலரை நுகர மணம் வீசியது எது? குழப்பத்தில் நான்
எதை கொடுத்தாலும் அளந்து கொடு.
எதை பெறுபவரின் நிலை அளந்து
கொடு .பெறுபவருக்கு எவ்விதத்தில்
பயன் தரும் அதை அள.நிறைந்த
ஜாடியை நிரப்ப நினைப்பது எவ்வளவு
அறிவீனமோ. அந்த அளவிற்கு
இருப்பவருக்கே கொடுப்பது.அவர்
இடத்தில் எங்கோ ஒன்று. அதுவே
தேவை இருப்பவரிடம் ஒன்று
பலவாகும்.அது எதுவாக இருந்தாலும்
சரி சொல்லும் அப்படியே.
தானத்தை அளந்து கொடுக்காதே
கடனை அளந்து கொடு
அள்ளிக்கொடு அன்பை
கிள்ளிக் கொடு பசியை
சொல்லி கொடு பண்பை
சொல்லாமல் கொடு கையை
தேடி கொடு உன்னை
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...