Monday, May 22, 2023

என்னை எழுப்பிய அகிலாவிற்கு by Veena Shankar

 


என்னை எழுப்பிய அகிலாவிற்கு,


தமிழ் பேச்சில் செழுமையோ? தட்டி கொடுக்கும் திறமையோ?


ஆங்கிலத்தில் வல்லமையோ? அடுத்தவரை வடிவமைக்கும் விதமோ?


ஏற்றி விட்ட தீபமோ? அதுவும் அணையாமல் காக்கும் சுடரோ?


காக்கும் கரங்களோ? கரத்தை ஆயுதமாய் மாற்றும் கலையோ?


அடுத்தவருக்கு உதவும் குணமோ? தேவையறிந்து கொடுக்கும் பண்போ? 


ஆதரவற்ற மனதிற்கு பாதுகாப்போ? நல்லதை தூண்டிவிடும் உணர்வோ?  


பூ போன்ற புன்னகையோ? என்னுள் சிந்தனையை பூக்க வைத்த மனமோ?


மெய் வருடும் பூங்காற்றோ? அடக்கத்தால் என் மனதை தடுமாற வைக்கும் சூறாவளியோ?


ஆக்கத்திற்கு வழி கோலும் திடமோ ?பிறர் மனம் அறிந்து செய்யும் செயலோ? 


செயலை பகிர்ந்து அளிப்பதும் கடமையோ? பாரா முகம் இல்லாமல் காட்டும் கருணையோ?


ஊக்கத்திற்கு காட்டும் பச்சைக் கொடியோ? அழிவிற்கு விடை கொடுக்கும் நெஞ்சமோ?


உங்கள் பேச்சை ரசித்துப் பார்த்த நாட்களோ? என்னுள் மறக்க முடியாத நினைவோ?

3 comments:

  1. அருமை வித்யா..அகிலா பற்றி எங்களுடைய மனதில் இருந்த அனைத்தையும் நீங்க அழகான கவிதையாக வடித்ததிற்க்கு..அருமை...அருமை...

    ReplyDelete
  2. அருமை வீணா..பெயர் மாறி விட்டது..

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...