Tuesday, May 2, 2023

படமும் குட்டிக்கதையும் by Veena Shankar



 பகுதியாய் பிரிந்து நீர் அருந்தினாலும் சேர்ந்து வாழும் எறும்புகள்


நீரோ ? பாயாசமோ? ஒற்றுமையே எங்கள் பலம் என சொல்லும் காட்சி


அடுத்த அட்சய திரிதியைக்கு என்னுடைய கழுத்து மாலைக்குரிய பதக்கம் இது தான். எத்தனை அழகு கருப்பு பாசியில் கோர்க்கப்பட்ட தேன் நிற பாசியும் மத்தியில் மரகத பச்சை கல்லும்.


 எறும்புகளின் மழைநீர் சேமிப்பு பற்றிய அவசர கூட்டம், நடக்குமிடம் இலையின் மைதானத்தில்


 இலைக்கு மத்தியில் இருப்பது என்ன இது மழைநீரா? என்று கேட்டது புற்றிலிருந்து இலையின் மேல் ஏறி வந்த ஒரு எறும்பு. அந்த எறும்பின் கேள்விக்கு பதில் அளிக்க நினைத்த மற்ற எறும்புகள் ஒவ்வொன்றாக புற்றை விட்டு வெளி வந்தன . அதற்கு இன்னொரு எறும்போ இல்லை இல்லை இது மரத்தின் பட்டையிலிருந்து கசிந்த பிசின் என்றது. அதற்கு இல்லை இது பறவையின் எச்சம் தான் என்றது மற்றொரு எறும்பு. இது பறவையின் எச்சமாய் இருக்காது என்று ஆணித்தரமாக சொன்னது இன்னொன்று. இது குழந்தைகள் சாப்பிடும் ஜெல்லி என்றது அடுத்த எறும்பு. இப்படி ஒவ்வொரு எறும்பும் ஒவ்வொன்று சொன்னது. இருந்தாலும் ஒருவருடைய பதில் இன்னொருவருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஒற்றுமைக்கு பெயர் போன எறும்புகள் விவாதம் செய்ய விரும்பாமல் ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, சரி வாருங்கள், அதனை லேசாக முகர்ந்து பார்த்து முடிவுக்கு வருவோம் என்று தலைமை எறும்பு சொல்ல, மற்றவை அதை ஆமோதிக்க களம் இறங்கின அவைகள். அதில் துடுக்கான எறும்பு ஒன்று, சற்று முன் செல்ல, அதன் வாயானது இலையின் மத்தியில் மோதி நிற்க, அந்த எறும்பு சற்றே முகம் சுளித்து, உப்பு கரிக்கிறது என்று மற்ற எறும்புகளை பார்த்து சொன்னதும், எல்லா எறும்புகளும் மத்தியில் சுற்றி வட்டமிட்டு கூடின. அப்போது ஏதேச்சையாக ஒரு எறும்பு மரத்தின் மேலே பார்க்க ஒரு பெண் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்ததை பார்த்து மற்ற எறும்புகளை காண செய்ய , எதற்காக இந்த பெண் அழுகிறாள் என்று அறியாத எறும்புகள் மறுபடியும் கூட்டத்தை கூட்டின அவள் கண்ணீரின் காரணத்தை அறிய. அமைதியாய் விவாதம் தொடருமா? என்று கதை கேட்டு நின்ற நமக்கு, காற்று வந்து அந்த கண்ணீரை பூமியில் கரைத்து விட்டது.

2 comments:

  1. Wow .. தண்ணீர் என்று பார்த்தால் கண்ணீர் சொல்லும் கதையா இது?...எறும்புகள் மனம் நுழைந்து ,அவர்கள் மனம் படித்து ..படைத்து விட்டீர்கள் இங்கே ..மிக அருமை Veena

    ReplyDelete
  2. நன்றி கிருத்திகா

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...