Tuesday, May 23, 2023

படபடப்பு பரபரப்பு by Vidhya Nivash



 ஒரே படபடப்பு அந்த நேரத்தை கடக்கும்

 போது தினமும் காலை ...பரிட்சை

 நேரமா.. இல்லை.

எல்லாத்தையும் காலம் தவறாமல்

 செய்தே பழகிப்போச்சு என்ன செய்ய.

 எத்தனை முறை சொன்னாலும் புரியல

 புத்திக்கு...

தாமதமாக போன என்ன? ரொம்ப

 யதார்த்தமான தலைமுறையுடன்

 ஒத்துப்போக முடியவில்லை.எதையும்

 எளிதாக எடுத்துக்கொள்ளும்

 மனப்பான்மை, எதுவாக இருந்தால்

 என்ன..ரொம்ப தெளிவாக இருக்கும்

 இந்த தலைமுறை கண்டு

 கத்துக்கொள்ள வேண்டியவை

 இருந்தாலும், புரியல இந்ந புத்திக்கு

 எப்போதும் பரபரவென எத்தனை

 முறை சொல்ல மாறி வருகின்றன

 பழக்கத்திற்கு உன்னை

 பக்குவப்படுத்திக் கொள்ள அவரை

 மாற்ற முடியுமோ !இல்லையோ!

 உன்னை நீ அமைதிப்படுத்திக்

 கொள்.நடப்பது நடக்கத்தான்

 போகிறது. எதற்கு படபடப்பு, பரபரப்பு..

மனமே ரிலாக்ஸ் என்று எத்தனை

 முறை படித்தாலும் நடைமுறைக்கு எது

 சாத்தியம்??

கடிகாரத்தில் நொடிக்கு துடிக்கும் முள்

நிமிடத்திற்கு நகரும் முள்,மணிக்கு

 நகரும் முள்..இப்போது அந்த நொடி

 முள்ளே இல்லையே.நின்று

 நிதானமாக செல் படபடக்கதே..நீ

 இல்லையென்றாலும் சுற்றுவது

 சுற்றும் .கொஞ்சம் நின்று தான் பார்

 உன்னை உனக்கு புரியுமில்ல.

2 comments:

  1. அருமை. நேரத்தின் ஓட்டத்தில் நம்மையும் மறந்து எந்த கோட்டையை பிடிக்க என்பது தெரியாமல் நகருவதும் ஓடுவதும், துள்ளுவதும் ஏன்? விடையரியா கேள்விகளுக்குள் இதுவும் அடக்கம். நேரத்தின் ஓட்டத்தை கட்டுபடுத்த முடியாது. ஆனால் சிறிது கடிகாரத்தை பார்க்காமல் நம்மை நாம் அறிய வேண்டும்

    ReplyDelete
  2. உண்மை நன்றி வீணா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...